அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

28 December, 2010

முறை படுத்திய திருமணம்

நான் ஏற்றவும் இல்லை!
மரபுகளை முறிக்கவும் இல்லை!
வால் வீச பயிலவுமில்லை!
வாலோனை தூதுக்காய் அனுகியதும்மில்லை !

மதம் கொண்ட யானை,
அடக்க முடியாத குதிரை,
முரட்டுத்தனமான காளை,
இவற்றோடு களம்புகவும் இல்லை!

பளு தூக்குதல்,
தடியனோடு குஸ்தி,
கவிஞனோடு போட்டி - என்பல
சோதனை சுற்றுகளை கண்டதும்மில்லை!

கொஞ்சமாய் காதல்
நுரைதள்ள அடி,
காதலை மெய்ப்பிக்க
மெய்வருந்த எழுதும் குருதிமடல்கள்,
கண் இமைக்கும் தூரத்தில்,நேரத்தில்
காதலி கடந்து செல்வாள் -என
ஒலி நூற்றாண்டுகளாய் ஒற்றைக்காலில் தவம்,
காதலி மட்டுமே தேவதையாய்,
மற்ற அனைவரும் அரக்கர்களாய்!

தெரிந்தே,
நரக நெருப்பில் கால்புதைத்து,
அருகம்புல் மாலையனியும் கதை........-காதல்!

ஐய்யகோ காதலை நினைக்கும்போதே,
ஆபத்துமணி மூலையில் சத்தமாய்!

நலம் தெரிந்து,காலம் பார்த்து,
உயரம் பார்த்து,உள்ளமும் பார்த்து,
ஏனைய எல்லா பொருத்தங்களும் பார்த்து,
நாள் குறித்து, அழைப்பிதழ்களை அழகாய்அச்சடித்து,
மங்கலமாய் மஞ்சள்ளிட்டு,

அனைவரையும் ஒருங்கினைத்து!


பெற்றவர்கள்,
கண்ணே,மணியே - என
பொத்தி,  பொத்தி வளர்த்த பொக்கிஷத்தை!

மணவாளன் கை சமர்பிக்க,
பெற்றவர்கள் பெருமையில்,
ஆன்றோர்களின் ஆசியோடு,
சான்றோர்களின் சம்மதத்தோடு,
நண்பர்களின் வாழ்த்து பெற்று ,
கரகோஷங்கள் வின்பிளக்க!

நலமாய் தொடங்குமே வாழ்க்கை
முறைபடுத்திய திருமணத்தில்!  
- நவீன மென்மையானவன்

                                                                                     


  

4 comments:

kesavan said...

YA ITS NICE NAVEEN,ITS REFLECT ONE OF THE PART OF LOVE -KARTHICKSMART81

Law student said...

நவீன், தலைப்பே அருமை...
வரிகள் அனைத்தும் பிரமாதம்...
இன்னும் கொஞ்சம் கோர்வையாய் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்!!
சிந்தனைகள் தொடர வாழ்துக்கள் நண்பா!! :)

பூஞ்சோலை said...

கவிதை அருமை
கொஞ்சம் எழுத்துப் பிழை கவனிக்கவும்
1.வால் = வாள்
2.அனுகியதும்மில்லை = அணுகியதுமில்லை
3.மாலையனியும் = மாலையணியும்
4.மஞ்சள்ளிட்டு = மஞ்சளிட்டு
5.ஒருங்கினைத்து = ஒருங்கிணைத்து
6.வின்பிளக்க = விண்பிளக்க அல்லது வான்பிளக்க
அன்புடன் பூஞ்சோலை....

Unknown said...

Idhan nohama nongu thinguradha??:-) just kidding nice kavithai...

Post a Comment