அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

07 January, 2011

தமிழ் மருத்துவம் (சித்தா) - 1


இயற்கை விவசாய முறையையும், இயற்கை உரங்களையும் பயன்படுத்த தவறிவிட்ட நாம் விவசாய புரட்சி என்று சொல்லி மரபணு மாற்றம் செய்யப்பட்ட
BT கத்தரிக்காய் ஏற்படுத்திய ஒவ்வாமை (அலர்ஜி )
மரபணு மாற்றம் செய்யப்பட்ட BT கத்தரிக்காய் 
விதைகளையும், இரசாயன உரங்களையும் பயன்படுத்தி நம் உண்ணும உணவுகளில் நமக்குத் தெரியாமலேயே நச்சுத் தன்மையை ஏற்படுத்திக் கொண்டோம். இதன் பக்க விளைவுதான் மலட்டுத்தன்மை, புற்று நோய், உடல்பருமன், சிறுவயதில் பெண்குழந்தைகள் பூப்பெய்துதல் போன்ற உடல் கோளாறுகளை நாம் காண முடிகிறது...(இந்த இயற்கை விவசாயத்திற்கும், உரங்களுக்கும் ஆதரவாக இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்களும், பேராசிரியர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களும் இன்னும் பலரும் எடுத்து வரும் முயற்சி தமிழகத்தில் இயற்கை விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என் நாமும் வாழ்த்துவோம்.)

06 January, 2011

தமிழ் மருத்துவம் (சித்தா)


தமிழ் மருத்துவம்னு சொன்னதும் என்னவோ கல்தோன்றி
மண் தோன்றா காலத்தேனு ஆரம்பிக்கப்போறம்னு நெனச்சு பயந்துடாதிங்க....

இது முழுக்க முழுக்க மூலிகை சம்பந்தப்பட்டது அப்பு...

( மூலிகைனு சொன்ன உடனே பயமக்களுக்கு கஞ்சா தான் நியாபகம் வரும் அப்புடி கிப்புடி நெனப்பு வந்துச்சு பிச்சுபுடுவேன் பிச்சு )

மனிதனுக்கு தீவினைக்கேற்ப ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கென அவன் வாழும் நாட்டிலும், காட்டிலும் எண்ணற்ற மூலிகைகளையும் - தாதுப்பொருட்களையும் - உயிரினங்களையும் தோற்றுவித்த இயற்கையன்னை,அவற்றினைக் கையாண்டு பிணி நீங்கிப்பெருவாழ்வு பெறும்
வழிமுறைகளையும் வகுத்துள்ளதையே "மருத்துவம்" என்று கூறுகின்றோம் .

மருத்துவ முறைகளில் இன்று சித்த மருத்துவத்தோடு ஆயுர்வேதம், யூனானி,ரோமர் வைத்தியம், கிரேக்க மருத்துவம், அலோபதி, ஓமியோபதி, பயோ கெமிஸ்ட்ரி, நேச்சுரோபதி, அக்குபஞ்சர் என்ற பல்வேறு வகையான வைத்திய
முறைகளும் நிலவி வந்தாலும், இவையனைத்திலும் முதலில் தோன்றியதும், எக்காலத்திற்கும் ஏற்றவண்ணம் அறுதியிட்டுக் கூறியுள்ளதும், வாழ்க்கை முறையை ஒட்டியதும், தத்துவார்த்த விஞ்ஞானப் பூர்வமானதும், என்றும் அழியாததுமாகிய "தமிழ் மருத்துவமே" மிக்க மேன்மையுடையது என்பதில் அறிவுடையோர்க்கு ஐயமிராது.

உலகிலிருக்கும் வைத்திய முறைகளிலேயே மிகவும் தொன்மைவாய்ந்த இந்த தமிழ் மருத்துவம் முதற் சங்க காலத்திற்கு முன்னரே தோன்றியதெனவும் நம்பப் படுகிறது. ஆரியர்கள் படையெடுத்து இந்தியாவில் குடியேறும் முன்பே, அதாவது 27000 ஆண்டுகளுக்கு முன்னரே நாடெங்கும் இம்மருத்துவம் பரவியிருந்தது எனவும் கூறுகின்றனர்.(இந்த சித்த மருத்துவம் ஆரியர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட வைத்திய முறை என்ற தவறான கருத்து நிலவுவதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்)

மூலிகை சம்மந்தப்பட்டதுன்னு சொல்லிட்டு இதுவரைக்கும் ஒரு மூலிகை வாசம் கூட வரலையேன்னு நெனக்காதீங்க... இதோ வந்துட்டேன் ..

பிதாமகன் சூர்யா ரேஞ்சுக்கு ஒரு கடாய் எடுத்து வச்சுக்கிட்டு பக்கத்துல ஒரு ஆள மைக்கோட நிக்கவச்சு வாங்க சார் வாங்கனு மருந்து விக்கபோரதில்ல எல்லாமே பாட்டி வைத்தியம்தான் ஓகே யா? ...

சரி இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி.. என்னடா கேள்வி கேக்கபோராங்களே படிச்சதெல்லாம் நெனப்புல இல்லையேன்னு என்ன கேள்வியாக இருக்கும்னு மண்டையப் பிச்சுக்காதிங்க

இப்போ இதப் படிக்கிற ஒவ்வொருத்தர் வீட்டுலயும் யாருக்காவது ஒரு நோய் கூட இல்லேன்னு சொல்ல முடியுமா? எங்க குடும்பம் ஆரோக்கியமான குடும்பம்னு மார்தட்டிக்கிக்கிற நிலைல இல்லேங்க

வீட்டுல ஒருத்தருக்கு சர்க்கரை, இரத்த அழுத்தம், மூட்டுவலி,உடல்பருமன், மூச்சு வாங்குதல்னு (இளைப்பு நோய் ) இப்படி ஏதாவது ஒண்ணு இருந்துட்டு தானே இருக்கு?

நம்ம தாத்தா பாட்டிக்கு இந்த வியாதிலாம் என்னன்னே தெரியாது....
ஏன்னா அவுங்கள இதெல்லாம் பாதிக்கல, அவுங்க காலைல எழுந்ததும் பழங்கஞ்சிய குடிச்சிட்டு வயக்காட்டுக்கு நடந்து போயி களை பறிச்சு, நாத்துநட்டு,
தண்ணி அடைச்சு (மடை திருப்பி) அப்படியே அங்க இருந்து நாலு காய்கறிய பறிச்சிட்டு வீட்டுக்குவந்து சோறு வடிச்சு, அம்மில அரைச்சு கொளம்பு வச்சு ......

ஸ்ஸ்ஸ்.... அப்பாடா நெனச்சா நமக்கே தலைய சுத்துதுப்ப்பா....

இவ்வளவு வேலையையும் இயந்திரங்களின் துணை இல்லாமல் செய்து, சுத்தமான காற்றையும் சுகாதாரமான இயற்கை உணவுகளையும் தெளிந்த நீர் ஆதாரங்களையும் பெற்று ஆரோக்கியமான அழகான வாழ்கையை வாழ்ந்தார்கள்.

ஆனால் இன்று நமது உணவுப்பழக்க வழக்கங்களை சிறிது யோசிச்சு பாருங்க
நம்ம உடலுக்கு தேவையான அடிப்படையான ஏழு சத்துக்களை சரியா நாம எடுத்துக்கறோமா...?

அது என்ன ஏழு சத்து பாக்கலாமா?

1. மாவுச்சத்து
2. கொழுப்புச்சத்து
3. நீர் சத்து
4. நார் சத்து
5. புரத சத்து
6. வைட்டமின்(உயிர் சத்து)
7. மினரல்ஸ் (தாதுச்சத்து)

மேலே சொன்ன ஏழு சத்துக்களில் நாம் அதிக அளவில் தவிர்க்க வேண்டிய சத்துக்களாகிய "மாவு" மற்றும்" கொழுப்புச் சத்துக்களையே" நம் அன்றாட உணவில் அதிக அளவில் எடுத்துக்கொள்கிறோம்.

உதாரணமாக பணிக்குச் செல்லும் பெண்களை எடுத்துக்கொண்டால் காலையில் அவசர அவசரமாக வீட்டில் இருப்பவர்களுக்கும், பள்ளிசெல்லும் குழந்தைகளுக்கும் மாவுச்சத்து அதிகம் மிகுந்த இட்லி, தோசை மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவு வகைகளாகிய நூடுல்ஸ், மக்ரோனி,பாஸ்தாஸ் போன்ற உணவுகளையே அதிக அளவு தயாரிக்கிறார்கள்.

மதியம் வடிக்கப்படாத சாதம் (குக்கர் சாதம்) மற்றும் எண்ணையில் பொரிக்கப்பட்ட கிழங்கு, காய்கள் போன்றவற்றை தயாரித்து வைத்து விடுகிறார்கள்...

மாலையில் பணியிலிருந்து திரும்பும்போதே மாவு பைகளோடு தான் வருகிறார்கள்...(இந்த மாவு கிடைக்க வில்லையென்றால் அவர்கள் படும்பாடு இருக்கிறதே.... அப்பப்பா...)
வீடு திரும்பிய உடனே குழந்தைகளுக்கு சுமார் நான்கே நான்கு கரண்டி எண்ணை விட்டு தோசை ஊத்திக்கொடுப்பாங்க பாருங்க அப்புறம் கொழுப்பு நிறைந்த தேங்காய் சட்னி, மசால் தோசை, பூரி போன்ற மாவு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளையே அதிக அளவு எடுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

ஆனால் நார்ச்சத்து, தாதுச்சத்து நிறைந்த உணவு வகைகளாகிய கேழ்வரகு, கம்பு, சோளம் இவையெல்லாம் நம் முன்னோர்களோடே மறைந்துவிட்டது...
நாமும் மறந்துவிட்டோம்.. நமக்கும் யோசிக்க நேரமில்லை....
அப்படி மறந்துவிட்ட நம் உணவு வகைகளையும், அதனால் ஏற்படும் நோய்களையும் அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்
கொள்வதை பற்றியும் கடவுள் இந்த உலகில் படைத்த படைப்புகளில் அழகிய அற்புத படைப்பாகிய நம் உடலை பராமரிப்பது பற்றிய விரிவான தகவலையும் இனி வரும் நாட்களில் பாப்போம்......
                                                 (தொடரும்.....)
-பூஞ்சோலை

03 January, 2011

காக்டெயில்


இந்த வருடத்தின் முதல் காக்டெயில் இந்த வருடம் மட்டுமல்ல இனி வரும் எல்லா நாட்களும் எல்லா வருடமும் நீங்கள் எல்லா வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.


 இலவசம் 


       "தமிழகத்தில் ஏழைகள் நடமாடும் வரை, தி.மு.க., அரசு இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்கும்,'' என்று பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

        ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி செய்துவிட்டு இன்னும் ஏழைகள் இருக்கும்வரையில் இலவசம் தருவோம் என்று அறிக்கை வெளியிட தனி மன திடம் வேண்டும் அய்யா தமிழகத்தில் இலவச வேஷ்டி சேலை அரிசி வாங்க இன்னும் ஏழைகள் இருப்பதை ஒப்புக்கொண்ட உங்கள் ஆட்சியை தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக மக்கள் போற்றுவார்கள்.

        இந்த இலவசம் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க நீங்கள் செய்யும் கண் கட்டிவித்தை என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்களே ? 

        வெங்காயத்தின் விலை குறையவில்லை; தக்காளி, பூண்டு விலை குறையவில்லை; சர்க்கரை விலை குறையவில்லை; அரிசி, பருப்பு, கோதுமை விலையும் குறையவில்லை; விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையும் குறையவில்லை!

        ஆம் !  2008-ம் ஆண்டில் 512 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, 2009-ம் ஆண்டில் 1060 ஆக உயர்ந்துள்ளது. இவ்வளவு பெரிய சாதனை செய்த நீங்கள் ஏழைகளுக்கு இலவசம் கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும். இல்லை இதுபோல் அறிக்கை கொடுக்க உங்களை தவிர வேறு யார் சரியானநபராக இருக்க முடியும். 
      
        இன்னும் இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்கவேண்டிய செல்வியோ தன் சேனைகள் புடைசூழ கொடநாடு காடுகளையும் இன்னும் தன் தோழி பற்றிய சிந்தனையில் இருந்துவிட்டு இப்போது தேசம் திரும்பி இருப்பதால் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளார் அதனால் உங்களை கேள்வி கேட்க கூடஇப்போது யாரும் இல்லாத நிலைதானே நாம் வைத்தது தானே சட்டம்.

        இப்படி இலவசம்.... இலவசம் ... என்று தமிழகத்தின் மக்களை இன்னும் மாக்களாகவே வைத்திருக்கும் உங்கள் ஆட்சி தொடர வேண்டும்.


எனக்கு ஒரு பழைய திரைப்பட வசனம் ஒன்று நினைவு வருகிறது 


    "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"


சேட் ஜி : ஹரே கிறுக்கன் தலிவர் எழுதுன இளைஞன் எப்போ ரிலீஸ் உனக்கு தெரியுமா ?


(யோவ் சேட்டு நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்னா யா "இஞ்சி பச்சடி தொட்டு நக்குடின்னு"குஜால் கதை கேக்குற ... ஓடிடு இல்ல வாய்ல போட்டு இருக்குற பான் ப்ளடு மூக்குல வரும் இப்போ )


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =  


  
    படித்ததில் பிடித்தது : மனிதன்டா         உத்திரபிரதேசம் பந்தாவன் -ராவர்ஷாஎன்னும் கிராமத்தில் நாராயணன் நாத் என்ற 70-வது வயது கிழவர் பஞ்சாயத்து தலைவராக அந்த கிராம மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
   
    நாராயணன் நாத் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
  

    பிச்சை எடுப்பது,கடந்த 40 வருடங்களாக பிச்சை எடுக்கும் நாராயணன் பஞ்சாயத்து தலைவராக சென்ற உள்ளாட்சி  தேர்தலில் அந்த கிராம மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட பின்னும் பிச்சை எடுத்தே வாழ்க்கை நடத்துகிறார்.

    மேலும் அந்த கிராம மக்களுக்கு பொது கழிப்பிட வசதி மற்றும் பள்ளிக்கூடம் கட்டித் தருவேன் என்று கூறும் இவருக்கு 4 பிள்ளைகள் இவர்கள் யாருமே அரசியலில் இல்லை என்பது தான் முக்கிய செய்தி.

நன்றி : மனோரமா நாளிதழ் 


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = .
              காடுகளின் ஆண்டு 


        2011 -ஐ காடுகளின் ஆண்டாக ஐ.நா.சபை  அறிவிப்பு செய்து இருக்கிறது. பூமி வெப்பமடைதல்,பருவம் தவறிய மழை பனிமலைகள் உருகுதல் இவற்றை தடுக்க இந்த அறிவிப்பை செய்துள்ளது.முழு விபரங்களுக்கு முந்தைய காக்டெயில் மரம் நடுவோம்  என்ற இணைப்பை சொடுக்கவும்.

           இன்னும்   காஷ்மீர் முதல் கன்னியாகுமரி   என்ற எங்கள் ஆங்கில வலைப்பூவையும் சொடுக்கவும்.

                                                                                                                                                                         மேலும் http://kashmir2kanyakumari.blogspot.com/ 
 வலைப்பூ மற்றும்  கிறுக்கன்  வலைப்பூவின் நண்பர்கள் இனைந்து இந்த வருட இறுதிக்குள் சுமார் 1 லட்சம் மர கன்றுகளை தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் நடுவதற்கு முயற்சிகள் செய்து வருகிறோம்.
                 
           முதல் முயற்சியாக ஜனவரி-26  அன்று 1000  மர கன்றுகளை திருநெல்வேலி மாவட்டத்தில் நடுவதற்கு ஈகிள் இளங்கோ அவர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றார்கள். எங்கள் முதல் முயற்சியில் எங்களோடு இணைந்து கொள்ள முன்வந்த  திரு. ஜீவானந்தம் அவர்களுக்கு நன்றி.!

           மேலும்  எங்களோடு இணைந்து இந்த பணியை மாவட்டம் தோறும் கொண்டு செல்ல ஆர்வம் உள்ள நண்பர்களை எதிர்பார்க்கிறோம்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
  
இந்தவார விளம்பரம் 
  
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
ஊறுகாய் (18+) அசைவ ஜோக் ஒரு சர்தார்ஜி நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
நண்பர் சொன்னார் : ” ஏம்பா சன்னல் கதவை சாத்தி
விட்டு பொண்டாட்டிய கொஞ்ச கூடாதா?
நேற்று சன்னல் வழி நீ செய்த ரொமாண்டிக் முழுவதும் பார்த்தேன்
என்றான்.

சர்தார்ஜி பெரிதாக சிரித்துக்கொண்டே நான்தான் நேற்று              
ஊரிலேயே இல்லையேஎன்றாரே பார்க்கலாம்.                                 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

சாலை பாதுகாப்பு வாரம் 


 
                  இந்த வாரம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரமாக அரசு அறிவித்துள்ளது சாலை பாதுகாப்பு குறித்து வெளியான வீடியோ கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவதின் அவசியம் குறித்து வெளியான விழிப்புணர்வு வீடியோ.

இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது தலைகவசம் அணிவோம்,மகிழுந்துகள் ஓட்டும்போது பாதுகாப்பு பட்டை அணிவோம்.சாலை விதிகளை சரியாக கடைப்பிடித்து விபத்துகளை தவிர்ப்போம்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

தேனை விற்பனை செய்யும் பூக்கள்ஆதவன் அஸ்தமிக்க
சாமந்தி மஞ்சளில்
கடற்கரை!

அலைகளுக்குள் போட்டி
கரையை முதலில்
தொடுப்பவர் யர்ர்?

நுரையோடு கரைவந்து
வலைகளை தேடும்
நண்டுகள்!

பரந்த மணலில்
பதிக்கப்பட்ட புதியகவிதைகள்
குழந்தைகளின் பாதச்சுவடுகள்!

கவிதை தியானத்தை
கலைப்பதாய் ஓர்
குரல்!

சுண்டல்,சுண்டல்,
சூடான சுண்டல்,
மாங்காய்,தேங்காய்,பட்டாணி சுண்டல்!

மக்கள் மத்தியில்
கெஞ்சலாய் வணிகம் செய்யும்
பிஞ்சுகளின் குரல்கள்!

மெலிந்த மேனியின்
மானத்தை காக்கும்
கிழிந்த ஆடைகள்!

கிருக்கியே தேய்ந்துபோன
எழுதுகோலின் மூக்காய்
அவனின் பாதங்கள்!

பிரம்மனின் கஞ்சத்தனமோ?
சுண்டல் குரலுக்கு
சொந்தமான குழந்தையின்
ஒட்டிய வயிறு!

வற்றிய குளத்தில்
சிக்கிய சேற்றுமீன்களாய்
அவனின் கண்கள்!

என்
இதயத்தில் இருள் சூழ,
இமைகள் இடிஇடிக்க,
மழைத்தூரும் முன்னமே!

சுண்டல் சுமையுடன்
சுறுசுறுப்பாய் அவனின் ஓட்டம!
சற்றே தூரத்தில் மாபெரும்
அரசியல் கூட்டம்!
குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடாம்!

அக்கூட்டத்திலும் அதேகுரல்
சுண்டல், சுண்டல்,
சூடான சுண்டல்,
மாங்காய், தேங்காய்,
பட்டாணி சுண்டல் !

சுன்டலோடு சேர்த்து
எதிர்காலத்தையும் விற்றுவிடும்
குழந்தைகள்,

தேனை விற்பனை செய்யும் பூக்களாக!
-நவீன் மென்மையானவன்