அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

03 January, 2011

தேனை விற்பனை செய்யும் பூக்கள்ஆதவன் அஸ்தமிக்க
சாமந்தி மஞ்சளில்
கடற்கரை!

அலைகளுக்குள் போட்டி
கரையை முதலில்
தொடுப்பவர் யர்ர்?

நுரையோடு கரைவந்து
வலைகளை தேடும்
நண்டுகள்!

பரந்த மணலில்
பதிக்கப்பட்ட புதியகவிதைகள்
குழந்தைகளின் பாதச்சுவடுகள்!

கவிதை தியானத்தை
கலைப்பதாய் ஓர்
குரல்!

சுண்டல்,சுண்டல்,
சூடான சுண்டல்,
மாங்காய்,தேங்காய்,பட்டாணி சுண்டல்!

மக்கள் மத்தியில்
கெஞ்சலாய் வணிகம் செய்யும்
பிஞ்சுகளின் குரல்கள்!

மெலிந்த மேனியின்
மானத்தை காக்கும்
கிழிந்த ஆடைகள்!

கிருக்கியே தேய்ந்துபோன
எழுதுகோலின் மூக்காய்
அவனின் பாதங்கள்!

பிரம்மனின் கஞ்சத்தனமோ?
சுண்டல் குரலுக்கு
சொந்தமான குழந்தையின்
ஒட்டிய வயிறு!

வற்றிய குளத்தில்
சிக்கிய சேற்றுமீன்களாய்
அவனின் கண்கள்!

என்
இதயத்தில் இருள் சூழ,
இமைகள் இடிஇடிக்க,
மழைத்தூரும் முன்னமே!

சுண்டல் சுமையுடன்
சுறுசுறுப்பாய் அவனின் ஓட்டம!
சற்றே தூரத்தில் மாபெரும்
அரசியல் கூட்டம்!
குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடாம்!

அக்கூட்டத்திலும் அதேகுரல்
சுண்டல், சுண்டல்,
சூடான சுண்டல்,
மாங்காய், தேங்காய்,
பட்டாணி சுண்டல் !

சுன்டலோடு சேர்த்து
எதிர்காலத்தையும் விற்றுவிடும்
குழந்தைகள்,

தேனை விற்பனை செய்யும் பூக்களாக!
-நவீன் மென்மையானவன்

14 comments:

Ashok.J said...

Thamizhanaai ..Thamizhanin Unarchigalai Therindhu Purindhu..Purindhadhai Pudhu Polivudan velipadutha iniyathamizh engal thamizh endru perumidham kollum vagayil Nam Thamizh Magudathil Muthukkalaai Padhikkapatta Naveenin Muthukkalai Patri Koora ondrum illai Rasipadharkku Naeram Poadhavillai
Anbudan
Ashok

yes yes yes said...

Unarchigal kavithayai vanthullathu

Ravi shankar said...

Naveensoft endra id-nan partha vudan naveen oru software companyla vela seyurar apadinu....but avar oru padaipalli endru endha kavithai mulam ulagathuku innoru mugathai katti irukirar....ethu kavithai ala avaroda unarvugal kavithai mulamaga soli irukurar.....vazhthukal naveen...:-) _Ravi Shankar

ஆமினா said...

எல்லாமே கலர்புல்லா அருமையா இருக்குங்க

karthick said...

It Is Not a Words ,True Pain From Poet Heart

Really Great Naveen

Welldone


by karthicksmart81

Ramji said...

Nalla iruku!!!

GeeBee said...

Super kavithai Naveen. Unakul ippadi oru talent iruku nu theriyaama poiduchi... Super ha iruku pa.. Ennum naraya kavithaigalai yethirpaarkuren.
-Giri Babu, Chennai

Eagle Elango said...

ஹாய் நவீன்!
உங்க கவிதை ரொம்ப அழகாக இருக்கு உங்களை போல!
உங்கள் கவிதை உங்க பெயருக்கு ஏற்றார் போல் ஈரமான உள்ளது.
உங்கள் கவிதை வெளிப்படுத்திய வரிகள்,மனதை மிகவும் வலிக்கச் செய்கிறது
உங்கள் கவிதைகளை பின்னூட்டமிடாமல் வாசித்து வருகிறேன்.உங்கள் கவிதை அனைத்துமே நன்றாகவே உள்ளது. ஏனோ இந்த கவிதைக்கு பின்னூட்டமிட வேண்டுமென்று தோன்றியது.

ஏனோ எனக்கு உங்கள் கவிதை ரொம்பவும் பிடிக்கிறது...

தொடரட்டும் உங்கள் கவிதை பயணம். வாழ்த்துக்களுடன்

ஈகிள் இளங்கோ
www.kashmir2kanyakumari.blogspot.com
வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம்-வளர்ப்போம்-2011ல்

kevin.kevin said...

Your poem left me breathless....so many lines in this poem so many are true! You are so talented please write more it would be an honor on our part!

a.naveensoft said...

தங்கள் மேன்மையான கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே

தங்களின் பாராட்டுக்கள் என்னை மேன்மேலும்

எழுத ஆவலை தூண்டுகிறது,தங்களின் மேம்மையான

ஆதரவிற்கு நன்றிகள், தொடர்ந்து படியுங்கள்,உங்கள்

கருத்துக்களை எண்ணின் இதயத்தில் பதியுங்கள்,

உங்கள் அன்பு நண்பன் - நவீன் மென்மையனவேன்.

shalih said...

Hi Naveen,

Yappadi entha kavithuligal uggalidam erunthu varukindrathu Malithuligal polay,Suththamaana thamil vaadai Yan Thaaen pudavai vaasanai polay arumai arumai ennum nugarthukkondu erukkalaam yandru thonuth thambi
thodarattum un kavithai manam.

A.R.Shalih

kavithai said...

hi naveen...

really nice. kavithai llarukkum varathu. ungal kavithai padaippu innum velivara en vaalththukkal naveen. naan ungal thozhi enbathil perumai kolkiren.god bless u naveen.

Anbu Tholan said...

Naveen superb heart touchableeee
i felt......

Law student said...

அருமை நவீன்!!
மிகச்சிறப்பான. உணர்வுப்பூர்வமான கவிதை..
மேலும் கோர்வையாக படைக்கவும்!!

Post a Comment