அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

15 January, 2011

காக்டெயில்_-*-_--__-

 


வாழ்த்துக்கள் சீமான் 

                       அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளதே சீமான் தன்மான அரசியல் புரட்சி அனல் தெறிக்கும் பரப்புரை எல்லாம் இனி அம்பேல் தானா? ஏன்னா அங்கே போனால் அடிமை சாசனம் எழுதி வாங்குவாங்கனு கேள்விப் பட்டேன். ( எல்லாம் ஒரு சந்தேகம் தான்,,)
ஈழ மக்களுக்கு கலைஞர் ஆட்சியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்கவே நீங்கள் ஜெயலலிதாவை தேர்தல் கூட்டணிக்கு தேர்ந்தெடுத்து இருந்தால் இதையும் கொஞ்சம் நினைவு படுத்துகிறேன்.மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் என்று சொன்னவர் தானே ஜெயா அவர்கள், ப.சி.அவர்களின் தேர்தல் வெற்றியில் நடந்த சித்து விளையாட்டு உங்களுக்கு மறந்து போய் விட்டது போலும் , குஜராத்தில் ரத்த வேட்டை நடத்தி குருதி ஈரம் காயும் முன் (தமிழகத்தின் எல்லா இயக்கங்களும் எதிர்த்தும் )தமிழக மண்ணில் சிகப்பு கம்பள வரவேற்பு கிடைக்கப் பெற்ற மோடி ஜெயா அவர்களால் எப்படி உபசரிக்க பட்டார் என்பதை மறந்து போய் விட்டீர்கள் போலும், வைகோ வையும் மரம் வெட்டியாரையும் இவர் படுத்தியபாடை உங்கள் நினைவுக்கு மறுபடியும் தந்துவிட்டு கனத்த இதயத்தோடு ஒரே ஒரு கேள்வி மட்டும் உங்களிடம் பார்பனீய எதிர்ப்பு தீண்டாமை ஏழைகள் பற்றியெல்லாம் இனி நம்மால் மேடையில் முழங்க முடியுமா? சீமான் அவர்களே............. நான் தமிழன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

திருந்தவே மாட்டீங்களாடா.......                                    கவுண்டமணி நிறைய படத்துல சொல்லுவர் பாருங்க இந்த பொழைப்பு பொழைக்கிறதுக்கு எங்கயாவது போய் பிச்சை எடுக்கலாம்னு, எனக்கு மேலே உள்ள நோட்டீஸ் பார்த்த உடன் அந்த வசனம் தான் நினைப்பு வந்தது 10-வது தமிழர் சங்க விழாவுக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்வுக்கும் இவனுக அழைத்துள்ள சிறப்பு விருந்தினரை பார்த்திங்களா தமிழனுக்கும்,தமிழுக்கும் குஷ்புவுக்கும் என்னடா தொடர்பு ?

வருடம் முழுவதும் நிலத்தில் உழைத்துவிட்டு தான் உழைத்ததன் களைப்பை போக்க,தன் வீரத்தையும்,அன்பையும் வெளிக்காட்ட இந்த பொங்கல் திருநாளை தமிழன் பயன்படுத்திக் கொண்டான். சிலம்பம், ஜல்லிக்கட்டு, கரகம், கும்மி, கபடி போன்ற வீரம் மற்றும் தன் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளில் மூழ்க வேண்டிய இந்த திருநாளில் கத்தார் தமிழர் சங்கம் அழைத்து இருக்கும் சிறப்பு விருந்தினர் யார் என்று மேலே உள்ள படத்தை சொடுக்கி பாருங்கள், குத்தாட்டம், குலுக்கும் குமரிகளையும் வாரா வாரம் டி.வி. யில் பார்ப்பது போதாமல் நேரில் அழைத்து தங்கள் தமிழர் உணர்வை பறைசாற்றும் போர்வையில் பொங்கலை காரணாமாக வைத்து பணம் பண்ண நினைக்கும் காலாச்சார கொலைகள் செய்யும் கத்தார் தமிழர் சங்க நிர்வாகிகளை மானங்கெட்ட பசங்களா உங்கள் வீட்டில் உள்ள பெண்களை கொண்டுவந்து குத்தாட்டம் போட வைத்து காசு பார்க்கலாமே என கேட்க தோன்றுகிறது எழுத்து நாகரீகம் கருதி அதை சொல்லாமல் விட்டுவிடுகிறேன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


இது தான் தேசபக்தி 

             இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோஹித், மாலேகோன் குண்டுவெடிப்பின் பின்னணியில் தானே மூளையாக இருந்து செயல்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்
 பிரக்யாசிங் என்ற கில்மா சாமியார்(,முழுமையான விபரத்திற்கு இங்கே செல்லவும்) அசீமானந்தா போன்ற அபினவ் பாரத் என்ற பாசிச தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர் இன்னும் நிறைய தேசப்பற்று நிறைந்த தலைவர்கள் இந்த சதி வலையில் சிக்கும் முன்பு இந்த வழக்கை விசாரணை செய்த (A.T.S) தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்கரே மும்பை தாக்குதலில் சரியாக திட்டமிடப் பட்டு காவி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் 
இந்நிலையில் பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் பிரசாத் உள்ளிட்ட 11 பேர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நாசிக் தனி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. 11 பேர் மீதும் மகாராஷ்டிர அரசு திட்டமிட்ட குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தீவிரவாதத் தடுப்புச் சட்டமாகும். கடுமையான சட்டப் பிரிவுகளைக் கொண்டது இது.

(இந்த நிலையில் பெரும் திருப்பமாக தனி நீதிமன்றம், திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முடியாது என்று கூறி அதை ரத்து செய்து விட்டது. மேலும், சாதாரண கோர்ட்டில் வழக்கமான வழக்காக இதை விசாரிக்குமாறும் அது அதிரடி உத்தரவிட்டுள்ளது.                   (ஆதாரம் :வைகறை வெளிச்சம்  )

            ஆனால் சென்ற வாரம் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை மறு விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளது C.B.I-இந்த வழக்கை எப்படி கொண்டு செல்லும் என்று பார்போம்.

(சம்பந்தமேயில்லாமல் குணங்குடி ஹனிபா அவர்களை வெடிகுண்டு வழக்கில் கைது செய்து பிணையே கொடுக்காமல் 12 வருடங்கள் சிறையில் வைத்து அனுப்பிய இதே அரசுகள்தான் இன்று மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இவர்களுக்கு இந்த வழக்கையே சாதாரண வழக்காக மாற்றி இருக்கிறது நீதித்துறை காவிமயமாக மாறிவருவதற்கு இதெல்லாம் உதாரணம் ) 

தாமதமாக கிடைக்கும் நீதி கொலைக்கு சமம் 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
 

எப்புடி.....சமீபத்தில் பார்த்து சிரித்தது 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

எங்கே சென்றீர்கள் கோவையில் கொதித்தவர்கள் ?


கீழே இருக்கும் இரண்டு மொட்டுக்களையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு குழந்தைகளையும் காணவில்லை என்று நாடகம் ஆடிய சைகோ தந்தைய போலீஸ் கைது செய்துள்ளது.

தாஷிபா (3), காஷியா தாஷிபா (2)

       இருபது வருடங்கள் கழித்து இந்த இரண்டு குழந்தைகளுக்கும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்ற பயத்தின் காரணமாக கொலை செய்ததாக குழந்தைகளின் தந்தை முகமது அலி வாக்குமூலம் கொடுத்து இருக்கிறான். கோவையில் கொலை செய்யப்பட்ட இரண்டு பிஞ்சுகளுக்காக கொதித்த, அந்த கொலைகளை கண்டித்து போராட்டம் மறியல் நடத்திய நம் சமுதாயம்.கொலையாளி ஒருவன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பின்னர்  வெடிகளை கொளுத்தி உண்மையில் நரகாசுரன் கொல்லபட்ட நாள் என்று பாராட்டு மழையில் காவல்துறையையும் தி.மு.க அரசையும் பாராட்டி பின்னர் எல்லாவற்றையும் மறந்துபோகும் நம் சமூகம் இந்த இரண்டு பிஞ்சுகளின் கொலையில் மூச்சு விட காணோமே?என்ன ஆச்சுப்பா உங்களுக்கெல்லாம்.. கோவை கொலையில் பணக்கார வீட்டு பிள்ளைகள் இறந்து போனார்கள் என்பதாலா நீங்கள் இவ்வளவு ஆக்ரோசம் கொண்டு வீதிகளுக்கு வந்தீர்கள். 

( இந்த பிஞ்சுகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட செய்தியை எல்லா ஊடகம் மூலமும் நாம் பார்த்தும் மூச்சு விட ஒரு மனிதன் கூட இல்லாத நிலையில் என்னால் இப்படித்தான் சிந்திக்க முடிந்தது...)
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
இந்த வார காணொளி = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


ஊறுகாய் அசைவ ஜோக் (18+)

   எக்ஸ் ஒரு பெரிய பன்றி மேல் சவாரி செஞ்சுகிட்டு வந்தான். வழியிலே ஒரு நண்பன் அவனை இடை மறிச்சு, பன்றியை பார்த்தபடி, “மச்சான் பன்னி எங்கே கெடச்சுது?” ன்னு கேட்டான்.
எக்ஸ் என்கிட்டே ஒரு பூதம் இருக்கு, என்ன கேட்டாலும்
தரும்ன்னு சொன்னான்
நண்பனுக்கும் உடனே ஆசை வந்துடுச்சு, “நானும் ஒண்ணு கேட்கட்டுமா?”ன்னு கெஞ்சினான்.
சரின்னு எக்ஸ் விளக்கை தேய்க்க, பூதம் வந்து நின்னுச்சு.
உடனே நண்பன் எனக்கு ஒரு சூப்பர் பொண்ணு வேணும்னான். 
மறு நிமிடமே, அவன் கையிலே ஒரு பன்னு மெத்து மெத்துன்னு வந்து நின்னுச்சு.
நண்பன் கடுப்பாகி எக்ஸ்சிடம் , “என்னடா, பொண்ணு கேட்டா, பன்னு  கொடுக்குது?”ன்னு கேட்டான்.
எக்ஸ் உடனே  “பூதத்துக்கு காது கொஞ்சம் டமாரம் மச்சான். நான் மட்டும் என்ன பெரிய பன்னி வேணும்னா கேட்டேன்?


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 


இந்த வார குசும்பு  

                       உன்ன கொல்லாம விடமாட்டேன்


              ஏலேய்.. கடிச்சி.. புடும்.. டா .. அது விஷ வண்டு மாதிரி இருக்கு ....

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் நிறை குறைகளை கருத்துரைகள் என்ற சுட்டியை சொடுக்கி எழுதுங்கள் அது எங்கள் குறைகளை களையவும் எண்ணங்களை செறிவு படுத்தவும் உதவும்..
                                                                         நன்றி - கிறுக்கன் 

14 January, 2011

தமிழ் மருத்துவம் (சித்தா) - 31. மூலிகை மருத்துவம்


1. அகத்தி
(தாவரவியல் பெயர்
: Sesbania grandiflora)

வருந்த சகத்திலெழு பித்தமதி சாந்தியாம்
"மருந்திடுதல் போம் வன்கிரந்தி வாய்
வெந்திருந்த சனம் செரிக்கும்
நாளும் அகத்தி
இலை திண்ணுபவர்க்குவெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறு மென் மரவகை. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமையலுக்கும், இல்லை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

1. கீரையை வாரம் ஒருமுறை வெயிலால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ பருகுவதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

2. அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் குடித்துவர சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.

3. அகத்தித் தைலம் வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வர பித்தம் தணிந்துலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.


2. அக்கரகாரம்
(தாவரவியல் பெயர்: Anacyclus pyrethrum)

அக்கரகாரம் அதன் பேர் உரைத்தக்கால்
உக்கிராக அத்தோடம் ஓடுங்கான் ஐ முக்கியமாய்
கொண்டால் சலம் ஊரும் கொம்பனையே தாகசுரம்
கண்டகல் பயந்தோடுங்காண்.
மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம்.இதன் வேர் மருத்துவப் பயனுடையது. தொண்டையில் நோய்த்தொற்று மூச்சுக்குழல்தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

1. ஒருதுண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம் மென்று விழுங்க பல்வலி, தொண்டைக்கம்மல், நாக்கு அசைக்க முடியாமை, நீர்வேட்கை ஆகியவை தீரும்.

2. 30 கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீரிலிட்டு 250மி. லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய் கொப்பளித்து வர பல்வலி நீங்கி பல்லாட்டம் குறையும். வாய் மற்றும் தொண்டைப் புண்கள் ஆறும்.3. அசோகு
(தாவரவியல் பெயர்: Saraca indica)

நீண்ட கூட்டிளைகளையும் செந்நிற மலர்களையும் உடைய செங்குத்தாக வளரும் மரம். அழகு தரும் மரமாக வீட்டின் முன்புறங்களில் வளர்க்கப் படுவதுண்டு.

பட்டை, பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சதை, நரம்பு ஆகியவற்றின் வீக்கம் அகற்றியாகவும், கருப்பைக் குற்றங்ககளை நீக்கும் மருந்தாகவும் பயன்படும்.

1. 100 கிராம் மரப்பட்டையை இடித்து 400 மி.லி நீரிலிட்டு 100 மி.லி ஆகும்வரைக் காய்ச்சி வடிகட்டி 100 மி.லி பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருகிவர பெரும்பாடு, வெட்டை, மூலம், கட்டிகள், வயிற்றுக்கடுப்பு நோய்கள் தீரும்.

2. மரப்பட்டை 40 கிராம், மாதுளம் வேர்ப்பட்டை 20 கிராம் பச்சையாக இடித்து ஒரு
நாள் ஊறவைத்து வடிகட்டி 30 மி.லி அளவாக 3,4 வேளை தினமும் சாப்பிட்டுவர 1 வாரத்தில் எவ்வளவு நாளான பெரும்பாடும் தீரும். காரம், புளி சேர்க்கக் கூடாது.

3. அசோகு பூ, மாம்பருப்பு சம அளவு எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை பாலில் சாப்பிட வயிற்றுப்போக்கு, இரத்தபேதி தீரும்.

4. அசோகுப் பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு( தோல்) சமனளவு பொடி செய்து 3 சிட்டிகை காலை, மாலையாக் வெந்நீரில் சாப்பிடக் கருச்சிதைவு, வயிற்றுவலி, கர்ப்பச் சூலை, வாயுத்தொல்லை நீங்கும். 100, 120 நாட்கள் சாப்பிட பெண் மலடு தீரும்.

4. அதிமதுரம்
(தாவரவியல் பெயர் : Glycyrrhiza glabra)

வயிறு, கழுத்து, தலை, நாரவாய் இவ்விடத்து நோய்கள்

சுரம் அதைப்பு ,உதாவர்த்தரோகம் ,வாயு மூலமுடி, எலி,
பாம்பு இவற்
றின் விஷம் நீங்கும்.

மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிறப் பூக்களையும் உடைய சிறு
செடியினம். நன்கு உலர்ந்த இதன் தண்டு மருத்துவப் பயனாகும். சளியகற்றுதல், வெப்பகற்றுதல், ஆகிய மருத்துவப் பயனுடையது.

1. 1 அல்லது 2 கிராம் அதிமதுரப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி தீரும். இருமல், மூலம், தொண்டைக் கரகரப்பு, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.

2. அதிமதுரப் பொடி, சந்தனத் தூள் ஆகியவற்றை சமமாகக் கலந்து 1 கிராம் அளவாகப் பாலில் கொடுத்துவர இரத்த வாந்தி நிற்கும். உள் உறுப்புகளின் புண் ஆறும்.

3. அதிமதுரம், திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் சம அளவாகக் கொடுக்க நெஞ்சுச்சளி தீரும்.
5. அத்தி
(தாவரவியல் பெயர்: Ficus racemosa)

காரமோ உட்டினமாம் காதுகின்ற பித்தத்தை
நீரிழிவைத் தலை நீழ இரத்தம் சேரும்
கிரிசாரத்தைப் போக்கும் கிளர் கோளி எனும்
மரச்சரும் பாலதனை வாங்கு.
மாற்றடுக்கில் அமைந்து முழுமையான் இலைகளை உடைய மர வகை. கொத்தாகக் காய்க்கும். இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

1. அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுத்துவர நீரிழிவு, இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் இரத்தம் கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

2. அத்திப் பாலை மூட்டு வலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.

3. முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப் பனை, பூமிச்சர்க்கரைக் கிழங்கு சம அளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாட்கள் கொடுக்க தாது வளர்ச்சி அதிகமாகும்.

4. அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமஅளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை சாப்பிட பெரும்பாடு, சீதபேதி, இரத்த பேதி, ஆகியவை தீரும்.

5. அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சம அளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் சாப்பிட ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப் போக்கு தீரும்.

6. அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடித்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் சாப்பிட இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.

7. அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வரத் தீராத பெரும்பாடு தீரும்.

மன்னர்கள் காலத்தில் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு அத்திப்பாலை மருந்தாகப் பயன்படுத்தினர்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி

தொடரும்...
_ பூஞ்சோலை

13 January, 2011

நூலக கிடங்குகள்

தென்றலாய் தலைகோதி,
அன்பாய் அரவணைத்து,
உச்சி முகர்ந்து,
என்னின் ஒழுக்கம்
ஓங்கவே வேண்டி,

வாய்மை,பேராண்மை,
வீரம்,கற்புநெறி,
ஈகை,இரக்கம்,
மனிதநேயம் -எனபல
கட்டுக்கட்டாய் கதைகள் சொல்ல
கேட்டவண்ணம் அவர்களுக்குள்
புதைந்துக்கொண்டு மேற்கொண்ட
நிம்மதித்துயில்கள்!

வால்தனம் முற்றியச்சமயங்களில்,
தந்தையும்,தாயும் அதட்டல்கள்போட,
நீலிக்கண்ணீர் வடித்தபடி,
பாதுகாப்புத்தேடி உட்புகுந்த
பாட்டியின் முந்தானை!

எப்பொழுதும் எனக்குச்சாதகமாகவே,
தீர்ப்பளிக்கும் என்வீட்டின்
உச்சநீதி மன்றமாய்!

புதுமழையில் ஆட்டம்போட்டு,
சொட்ட,சொட்ட வீடுவந்தால்,
இலவசஇணைப்பாய் கிடைக்கும்
பாட்டிச்சேலை முந்தானை துவட்டல்கள்!

தாத்தாவின் கைபிடித்து
பவனி வந்த மறக்கமுடியாத
தேரடிவீதிகள்!

24மணிநேரமும் எனக்காய்
சேவை செய்ய காத்திருந்த
வங்கிகள்!
தாத்தாவின் சட்டைப்பையும்,
பாட்டியின் சுருக்குப்பையும்!

தவமாய் தவமிருந்தால்
வரங்கள் கிட்டும்'
கேட்டிருப்பீர்கள்!
இங்கே வரங்களே
தவமிருந்தன எனக்காய்!
தாத்தா,பாட்டி உருவில்!

இத்தனை சுகமளித்த
என்னின் பெற்றோர்களைச்
சான்றோர் என பறைசாற்றுவேன்!


சில வெறிநாய்களை ஈன்றெடுத்து,
சீராட்டி,பாராட்டி வளர்த்தமைக்கு
பரிசாய்!
பின்னாளில்
சிக்கி சின்னாபின்னப்பட்டு
கிழித்து எறியப்பட்ட
புத்தகங்களின் குவியலாய்!
முதியோர் இல்லங்களில்
தஞ்சம்புகும் முதியவர்கள்!

எளிதில் கிடைக்காத
அறிய பல
அனுபவ புத்தகங்கள்,
தூசிபடிந்து முடங்கி கிடக்கும்
நூலகங்களாய்!

முதியோர் இல்லங்களில்!


கனத்த இதயத்தோடு....!

-நவீன் மென்மையானவன்.
12 January, 2011

செத்துப்போன மனிதாபிமானம்


ராமநாதபுரம் : மூன்று ஆண்டுகளாக ரேஷன் கார்டு தராமல் இழுத்தடித்து வருவதைக் கண்டித்து, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், ஊனமுற்ற தம்பதி கதறி அழுதனர்.


ராமநாதபுரம் சின்னகடை தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் சாந்தி. ஆதரவற்ற இருவரும் மாற்றுத் திறனாளிகள். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். மதம் மாறிய இவர்கள், தங்கள் பெயரை அப்துல் ரஹிம், ஷப்ராபானு என மாற்றி, ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் குடியேறினர். ரஹிம் சைக்கிள் மெக்கானிக் வேலையும், பானு தையல் வேலையும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பின் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர்.
இதுவரை கிடைக்கவில்லை. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தொடர்ந்து தவழ்ந்து வந்து முறையிட்டனர். நேற்று குழந்தையுடன் வந்த தம்பதிக்கு, அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் கொதித்த இருவரும், கதறி அழுதபடி, மனவேதனையுடன் அதிகாரிகளுக்கு சாபம் விட்டு, அங்கிருந்து தவழ்ந்தபடி வெளியேறினர். இச்சம்பவத்தைப் பார்த்து மனு அளிக்க வரிசையில் நின்றவர்கள் மனவேதனை அடைந்தனர்.
அப்துல் ரஹிம் கூறியதாவது: ஓட்டு போடுவதற்கு மட்டும் காரில் வைத்து ராமநாதபுரம் அழைத்து வருகின்றனர். ரேஷன் கார்டு கேட்டால் ஆண்டு கணக்கில் அலைக்கழிக்கின்றனர். 2000 ரூபாய் கொடுத்தால் இரண்டு நாளில் ரேஷன் கார்டு தருவதாக இடைத்தரகர்கள் பேரம் பேசுகின்றனர். மனிதாபிமானம் செத்துவிட்டது. இனி இவர்களிடம் முறையிடப் போவதில்லை. இவ்வாறு அப்துல் ரஹிம் கூறினார்.
நன்றி தினமலர்....
நான் கடவுள் திரைப்படம் வந்தபோது ஆஹா... ஓஹோ... என்று பாராட்டி ஊனமுற்றோர்களின் வாழ்க்கையின் மறுபக்கத்தை இயக்குனர் பாலா அழகாக படம் பிடித்துக் காட்டினார் என்று கொண்டாடிய தமிழ்ச் சமூகமாகிய நமக்கு, இன்று இந்த மாற்றுத் திறனாளிகள் , அரசு அதிகாரிகளிடம் தங்களின் குடியுரிமை அடையாளமான ரேஷன் கார்டு கேட்டு ஆண்டுக் கணக்கில் அலைக் கழிக்கப்படுவது ஒரு விசயத்தை மறைமுகமாக நமக்கு உணர்த்துகிறது. ஏழ்மையும் ஊனமும் திரைப்படங்களில் மட்டும் வேண்டுமானால் ரசிக்கபடலாம். நிஜ வாழ்க்கையில் அவர்களின் மேல் எழும் வியர்வை வாசமும் கந்தல் ஆடையும் முகம் சுளிக்க வைக்கிறதா????


மேற்கண்ட கொடூரம் ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடந்துள்ளது. நமக்கு மேலும் நிறைய கேள்விகளைக் கேட்கத் தோன்றுகிறது.

  • இந்த ஊனமுற்றோர்களின் ஒரு விண்ணப்பம் கூட ஆட்சித் தலைவரின் பார்வைக்கு வரவில்லையா?
  • தரகு மாமாக்களின் பணத்தாசை விண்ணப்பத்தை ஆட்சித்தலைவரின் பார்வைக்குஅனுப்பவில்லையா?                                                                                               

  • அல்லது ஆட்சித்தலைவர் இந்தமாதிரியான விண்ணப்பங்களைப் பார்க்க விரும்பவில்லையா?

  • அவர்களின் அழுகுரல் அவரின் செவிகளுக்கு எட்டவில்லையா?

மாற்றுத் திறனாளிகளான இவர்கள் தங்கள் ஊனத்தைப் பொருட்படுத்தாது சைக்கிள் மெக்கானிக் வேலையும், தையல் வேலையும் செய்து சுயமரியாதையோடு வாழ்ந்து வரும் இவர்களிடமே மானம் கெட்ட இடைத்தரகர்கள் லஞ்சம் கேட்டார்கள் என்றால் மற்றவர்களின் நிலைஉங்களின் யூகத்திற்கே....

  • இப்படிப்பட்ட அரசு ஊழியர்கள் பிச்சைக்காரர்களின் தட்டில் இருக்கும் காசைக்கூட விட்டு வைப்பார்களா?

லஞ்சம் வாங்குவது அன்னையை விற்று பிள்ளைக்கு உணவளிப்பது. உங்கள் பிள்ளைக்கு உணவளிக்க நாங்கள் தயங்க மாட்டோம். உங்கள் அன்னையை விற்க லஞ்சம் வாங்கும் நீங்கள் தயாரா?


_ கிறுக்கன்.
_ பூஞ்சோலை.

11 January, 2011

தமிழ் மருத்துவம் (சித்தா) - 2

கடந்த பதிவில் கூறியது போல நம் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, கம்பு, சோளம், பயறுவகைகள், கீரை, காய்கறிகள் மற்றும் பழங்களில் மா, பலா, வாழை, நெல்லிக்கனி, நாவற்பழம், எலுமிச்சை போன்றவைகளை அதிக அளவிலும், அரிசி உணவு வகைகளைக் குறைவாகவுமே பயன்படுத்தினர். அப்படிப்பயன் படுத்தியதால் உடலுக்குத் தேவையானச் சத்துக்கள் சரிவிகித சமஅளவில் கிடைத்தது. நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து வந்தனர்...

ஆனால் இன்றோ நாம் கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றின் பயன் தெரிந்தும் பயன்படுத்தத் தெரியாததால் அவற்றை நாம் ஒதுக்கி விடுகிறோம். மேலும் இவையனைத்தும் இன்று நம் உபயோகத்திற்கு ஏதுவாக மாவாகவும், குருணையாகவும் எளிதில் கிடைக்கிறது.

பயறுவகைகளான நிலக்கடலை, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, கொள்ளு, மொச்சை, காராமணி, உளுந்து, எள் மற்றும் பருப்புவகைகள் ஆகியவற்றையும் கீரையில் அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, வல்லாரை, மணித்தக்காளி, அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, தூதுவளைக்கீரை மற்றும் காய்கறிகளில் சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி, அவரைக்காய், முருங்கைக்காய், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவையே முக்கியப்பங்கு வகித்தது.....

10 January, 2011

புத்தாண்டுதோன்றின் பொங்கலோடு தோன்றுக அப்படி இல்லையெனில் தோன்றலின் தோன்றாமை நன்று..!

தினசரியில் விடுமுறை
நாட்களை மட்டுமே
ஆராயும் பள்ளிச்சிறுவன்!

முத்து,முத்தாய்
பண்டிகைகள் நான்கும்
வரிசைக்கட்டி வந்துநிற்க!

கட்டி வைத்த ஆசைகளை
கட்டவிழ்த்து விட்டதனால்
வானரம் என பட்டம் சூட்டி
விட்டனரே!