அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

10 May, 2011

ஜனனம்

ஜனிக்கின்ற உயிக்கெல்லாம்
பலகோடி உறவிங்கே - அதில்
ஆதி முதல் உண்டானது
அன்னை எனும்
உறவென்பேன் .........
வாழ்வின்
ஒவ்வொரு நொடியும்
நான் சுவாசிக்கும்
நேசம் அது...-நான்
மரிக்கின்ற பொழுதும் கூட
மங்காத பாசம் அது......
கருவறையில்
உறைய வைத்தாய் -உன்
உயிரை விதையாக்கி
என் உயிரை
வளரவிட்டாய்.....
தொப்புள் கோடியில்
தோன்ற வைத்து -இம்
மண்ணுலகில் எனை
பிறக்க வைத்தாய்.....
இரத்தத்தை பிரித்தெடுத்து
பாலாக ஊட்டிவிட்டாய் .....
தாய்பாலின் உயிரோட்டத்தில்
நான் தத்தி தத்தி
நடக்கையிலே......
நிலா சோறு ஊட்டி விட்டு
தாலாட்டு நீ பாட....
ஆராரோ வாய் பாட்டில்
அசந்து போய் நானுறங்க....
இதுவரை கிட்டவில்லை
தாயே .................-அதுபோல்
ஓர் தூக்கம் ............
ஊண் உருகி
நின்ற பொழுதும்
பசியென்று
வாடிய பொழுதும்
தூணாகி நின்றவளே
பால் சோறு தந்தவளே.....
தட்டு தடுமாறி
நின்ற பொழுதும் -நான்
தடம் மாறி
சென்ற பொழுதும்...
பதறி துடித்தது
நீயல்லவா -எனை
தாங்கி பிடித்தது
என் தாயல்லவா .....
பாடுகின்ற குயிலின் கீதம்-மனதை
அள்ளுகின்ற அருவியின் நாதம்
ஆடுகின்ற மயிலின் தோகை -நெஞ்சை
வருடுகின்ற காதல் புறாக்கள்
துள்ளுகின்ற மானின் அழகு -வான்
கொட்டுகின்ற மழையின் சாரல் -தினம்
காண்கின்றேன் மாசற்ற
என் தாயுருவில் .....
குருதியை மையாக்கி
உணர்வை பேனாவாக்கி -என்
உள்ளமெனும் ஏடுகளில்
உள்ளதை நான் எழுத
நினைக்கையில் .........
என்ன வென்று சொல்லிடுவேன்
என் தாயவளை
வாழ்த்த இங்கு
வார்த்தைகளே இல்லை....
எங்கு தேடித் பார்த்தாலும்
சிந்தனைகள் செலவிட்டாலும்
இவ்வையகத்தில் நான் பயின்ற
அத்தனையும் நீ தந்ததே .....
என் செய்வேன்
என் அருமை தாயே....
என்ன நான்
தந்திடுவேன் உனக்கீடாக...
என் உடலின்
சதை கோளங்களை
கேட்கிறேன் ....
எள்ளி நகையாடுகிறது ....
என் உடலுக்கு
அரணாக நிற்கும்
எலும்பு கூடுகளை
கேட்கிறேன்.............
ஏளனப்பார்வை பார்க்கிறது....
உள்ளுக்குள் இரத்தத்தை
உறிஞ்சி எடுக்கும் -என்
இதயமதை கேட்கிறேன்
இறுமாப்புடன் சிரிக்கிறது...
இவ்வுலகெங்கும்
நிறம் பார்க்கும் -என்
கருவிழிகளை கேட்கிறேன்
அத்தனையும் எனை பார்த்து
ஒன்றாக கூறிய பதில் ....
நான் உனதல்ல வென்று -ஆம்
அவை அத்தனையும்
நீ தந்தது......
நான் பேசும் முதல்
மொழியும் நீ தந்தது -உனக்கு
ஈடாய் வேறேதென்பது.....
மனம் ஒடிந்து விழுந்தாலும்
போதிக்க புத்தனே ஆனாலும் -நான்
சாதிக்க என் தாய் மடி போதுமென்பேன் !!
ஆயிரம் உறவுகள்
ஆண்டு தோறும் வந்ததாலும்-அந்த
ஆண்டவனே வந்துநின்று
உறவென்றே சொன்னாலும் -என்
அன்னையவள் உறவுக்கு
ஈடில்லை என்றிடுவேன் ............
படைப்புக்கு பிரம்மனில்லை -இம்மண்ணுலகில்
தாயென்றே சொல்லிடுவேன் .....
தவமிருந்து கேட்கிறேன்
தாயே வரங்கள் நீயும்
தந்திட வேண்டும்..............
கொச்சு பிள்ளையாய்
உன்னில் நான்
பிறந்திட வேண்டும் .....
கொஞ்சும் மொழிகள்
உன்னுடன் நான்
பேசிடல் வேண்டும்....
சின்ன சின்ன தவறுகள்
நான் செய்திடல் வேண்டும் ....
அதற்கு நீயும்
செல்லமாய் கடிந்திடல்
வேண்டும் ......
அமுதெனும் தாய்பாலை -நீ
அள்ளி அள்ளி
வழங்கிட வேண்டும் .....
அன்பெனும் கடலில்
நான் தினம் தினம்
நீந்திடல் வேண்டும் .....
சாகும் வரை
குழந்தையாய் உன் மடியில்
நான் உறங்கிட வேண்டும்...
ஆயிரம் ஆயிரம்
ஜென்மங்கள் எடுத்தாலும் -தாயே
நீயே என் தாயாய்
வந்திடல் வேண்டும்...............

உங்கள் நண்பன்
பாலா5 comments:

சொல்லழகு said...

அருமை!
அருமை!

ஈடில்லா தாயன்பு பற்றிய
இனிய கவிதை.

பூஞ்சோலை said...

இதை விட சிறப்பா தாய்மையை, தாயன்பை யாரும் சொன்னதில்லை, சொல்லவும் முடியாது. வாசிக்கும்போதே தாயை நேசிக்கும், தாயன்பை யாசிக்கும் அனைத்துக் கண்களும் கலங்கும். அருமை பாலா...

அரசன் said...

தாய்மையை கூறிய விதம் சிறப்பு ... வாழ்த்துக்கள்

பாலா said...

anaivarukkum en nantrihal............

Ramana said...

vaazhaitholil vazhuki vizhumbothu
sagotharar siripar
sagothariyar siripar
uravinargal siripar
nanbargalum siripar
varuththapadubhaval THAAI mattume

Post a Comment