அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

14 January, 2011

தமிழ் மருத்துவம் (சித்தா) - 3



1. மூலிகை மருத்துவம்


1. அகத்தி
(தாவரவியல் பெயர்
: Sesbania grandiflora)

வருந்த சகத்திலெழு பித்தமதி சாந்தியாம்
"மருந்திடுதல் போம் வன்கிரந்தி வாய்
வெந்திருந்த சனம் செரிக்கும்
நாளும் அகத்தி
இலை திண்ணுபவர்க்கு



வெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறு மென் மரவகை. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமையலுக்கும், இல்லை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

1. கீரையை வாரம் ஒருமுறை வெயிலால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ பருகுவதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

2. அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் குடித்துவர சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.

3. அகத்தித் தைலம் வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வர பித்தம் தணிந்துலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.


2. அக்கரகாரம்
(தாவரவியல் பெயர்: Anacyclus pyrethrum)

அக்கரகாரம் அதன் பேர் உரைத்தக்கால்
உக்கிராக அத்தோடம் ஓடுங்கான் ஐ முக்கியமாய்
கொண்டால் சலம் ஊரும் கொம்பனையே தாகசுரம்
கண்டகல் பயந்தோடுங்காண்.
மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம்.இதன் வேர் மருத்துவப் பயனுடையது. தொண்டையில் நோய்த்தொற்று மூச்சுக்குழல்தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

1. ஒருதுண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம் மென்று விழுங்க பல்வலி, தொண்டைக்கம்மல், நாக்கு அசைக்க முடியாமை, நீர்வேட்கை ஆகியவை தீரும்.

2. 30 கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீரிலிட்டு 250மி. லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய் கொப்பளித்து வர பல்வலி நீங்கி பல்லாட்டம் குறையும். வாய் மற்றும் தொண்டைப் புண்கள் ஆறும்.



3. அசோகு
(தாவரவியல் பெயர்: Saraca indica)

நீண்ட கூட்டிளைகளையும் செந்நிற மலர்களையும் உடைய செங்குத்தாக வளரும் மரம். அழகு தரும் மரமாக வீட்டின் முன்புறங்களில் வளர்க்கப் படுவதுண்டு.

பட்டை, பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சதை, நரம்பு ஆகியவற்றின் வீக்கம் அகற்றியாகவும், கருப்பைக் குற்றங்ககளை நீக்கும் மருந்தாகவும் பயன்படும்.

1. 100 கிராம் மரப்பட்டையை இடித்து 400 மி.லி நீரிலிட்டு 100 மி.லி ஆகும்வரைக் காய்ச்சி வடிகட்டி 100 மி.லி பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருகிவர பெரும்பாடு, வெட்டை, மூலம், கட்டிகள், வயிற்றுக்கடுப்பு நோய்கள் தீரும்.

2. மரப்பட்டை 40 கிராம், மாதுளம் வேர்ப்பட்டை 20 கிராம் பச்சையாக இடித்து ஒரு
நாள் ஊறவைத்து வடிகட்டி 30 மி.லி அளவாக 3,4 வேளை தினமும் சாப்பிட்டுவர 1 வாரத்தில் எவ்வளவு நாளான பெரும்பாடும் தீரும். காரம், புளி சேர்க்கக் கூடாது.

3. அசோகு பூ, மாம்பருப்பு சம அளவு எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை பாலில் சாப்பிட வயிற்றுப்போக்கு, இரத்தபேதி தீரும்.

4. அசோகுப் பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு( தோல்) சமனளவு பொடி செய்து 3 சிட்டிகை காலை, மாலையாக் வெந்நீரில் சாப்பிடக் கருச்சிதைவு, வயிற்றுவலி, கர்ப்பச் சூலை, வாயுத்தொல்லை நீங்கும். 100, 120 நாட்கள் சாப்பிட பெண் மலடு தீரும்.

4. அதிமதுரம்
(தாவரவியல் பெயர் : Glycyrrhiza glabra)

வயிறு, கழுத்து, தலை, நாரவாய் இவ்விடத்து நோய்கள்

சுரம் அதைப்பு ,உதாவர்த்தரோகம் ,வாயு மூலமுடி, எலி,
பாம்பு இவற்
றின் விஷம் நீங்கும்.

மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிறப் பூக்களையும் உடைய சிறு
செடியினம். நன்கு உலர்ந்த இதன் தண்டு மருத்துவப் பயனாகும். சளியகற்றுதல், வெப்பகற்றுதல், ஆகிய மருத்துவப் பயனுடையது.

1. 1 அல்லது 2 கிராம் அதிமதுரப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி தீரும். இருமல், மூலம், தொண்டைக் கரகரப்பு, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.

2. அதிமதுரப் பொடி, சந்தனத் தூள் ஆகியவற்றை சமமாகக் கலந்து 1 கிராம் அளவாகப் பாலில் கொடுத்துவர இரத்த வாந்தி நிற்கும். உள் உறுப்புகளின் புண் ஆறும்.

3. அதிமதுரம், திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் சம அளவாகக் கொடுக்க நெஞ்சுச்சளி தீரும்.
5. அத்தி
(தாவரவியல் பெயர்: Ficus racemosa)

காரமோ உட்டினமாம் காதுகின்ற பித்தத்தை
நீரிழிவைத் தலை நீழ இரத்தம் சேரும்
கிரிசாரத்தைப் போக்கும் கிளர் கோளி எனும்
மரச்சரும் பாலதனை வாங்கு.
மாற்றடுக்கில் அமைந்து முழுமையான் இலைகளை உடைய மர வகை. கொத்தாகக் காய்க்கும். இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

1. அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுத்துவர நீரிழிவு, இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் இரத்தம் கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

2. அத்திப் பாலை மூட்டு வலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.

3. முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப் பனை, பூமிச்சர்க்கரைக் கிழங்கு சம அளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாட்கள் கொடுக்க தாது வளர்ச்சி அதிகமாகும்.

4. அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமஅளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை சாப்பிட பெரும்பாடு, சீதபேதி, இரத்த பேதி, ஆகியவை தீரும்.

5. அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சம அளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் சாப்பிட ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப் போக்கு தீரும்.

6. அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடித்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் சாப்பிட இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.

7. அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வரத் தீராத பெரும்பாடு தீரும்.

மன்னர்கள் காலத்தில் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு அத்திப்பாலை மருந்தாகப் பயன்படுத்தினர்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி

தொடரும்...
_ பூஞ்சோலை

1 comment:

Unknown said...

Poonjolai Uggal poovukku manammattumthaan erukkum yandru ninaithayn Athil evvalavu marunthumgal eruppathu uggal padaipai paarthapothu thaan purinthukondayn. Thodaratum Uggal Maruthuvam.

Post a Comment