அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

12 January, 2011

செத்துப்போன மனிதாபிமானம்


ராமநாதபுரம் : மூன்று ஆண்டுகளாக ரேஷன் கார்டு தராமல் இழுத்தடித்து வருவதைக் கண்டித்து, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், ஊனமுற்ற தம்பதி கதறி அழுதனர்.


ராமநாதபுரம் சின்னகடை தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் சாந்தி. ஆதரவற்ற இருவரும் மாற்றுத் திறனாளிகள். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். மதம் மாறிய இவர்கள், தங்கள் பெயரை அப்துல் ரஹிம், ஷப்ராபானு என மாற்றி, ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் குடியேறினர். ரஹிம் சைக்கிள் மெக்கானிக் வேலையும், பானு தையல் வேலையும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பின் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர்.
இதுவரை கிடைக்கவில்லை. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தொடர்ந்து தவழ்ந்து வந்து முறையிட்டனர். நேற்று குழந்தையுடன் வந்த தம்பதிக்கு, அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் கொதித்த இருவரும், கதறி அழுதபடி, மனவேதனையுடன் அதிகாரிகளுக்கு சாபம் விட்டு, அங்கிருந்து தவழ்ந்தபடி வெளியேறினர். இச்சம்பவத்தைப் பார்த்து மனு அளிக்க வரிசையில் நின்றவர்கள் மனவேதனை அடைந்தனர்.
அப்துல் ரஹிம் கூறியதாவது: ஓட்டு போடுவதற்கு மட்டும் காரில் வைத்து ராமநாதபுரம் அழைத்து வருகின்றனர். ரேஷன் கார்டு கேட்டால் ஆண்டு கணக்கில் அலைக்கழிக்கின்றனர். 2000 ரூபாய் கொடுத்தால் இரண்டு நாளில் ரேஷன் கார்டு தருவதாக இடைத்தரகர்கள் பேரம் பேசுகின்றனர். மனிதாபிமானம் செத்துவிட்டது. இனி இவர்களிடம் முறையிடப் போவதில்லை. இவ்வாறு அப்துல் ரஹிம் கூறினார்.
நன்றி தினமலர்....
நான் கடவுள் திரைப்படம் வந்தபோது ஆஹா... ஓஹோ... என்று பாராட்டி ஊனமுற்றோர்களின் வாழ்க்கையின் மறுபக்கத்தை இயக்குனர் பாலா அழகாக படம் பிடித்துக் காட்டினார் என்று கொண்டாடிய தமிழ்ச் சமூகமாகிய நமக்கு, இன்று இந்த மாற்றுத் திறனாளிகள் , அரசு அதிகாரிகளிடம் தங்களின் குடியுரிமை அடையாளமான ரேஷன் கார்டு கேட்டு ஆண்டுக் கணக்கில் அலைக் கழிக்கப்படுவது ஒரு விசயத்தை மறைமுகமாக நமக்கு உணர்த்துகிறது. ஏழ்மையும் ஊனமும் திரைப்படங்களில் மட்டும் வேண்டுமானால் ரசிக்கபடலாம். நிஜ வாழ்க்கையில் அவர்களின் மேல் எழும் வியர்வை வாசமும் கந்தல் ஆடையும் முகம் சுளிக்க வைக்கிறதா????


மேற்கண்ட கொடூரம் ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடந்துள்ளது. நமக்கு மேலும் நிறைய கேள்விகளைக் கேட்கத் தோன்றுகிறது.

  • இந்த ஊனமுற்றோர்களின் ஒரு விண்ணப்பம் கூட ஆட்சித் தலைவரின் பார்வைக்கு வரவில்லையா?
  • தரகு மாமாக்களின் பணத்தாசை விண்ணப்பத்தை ஆட்சித்தலைவரின் பார்வைக்குஅனுப்பவில்லையா?                                                                                               

  • அல்லது ஆட்சித்தலைவர் இந்தமாதிரியான விண்ணப்பங்களைப் பார்க்க விரும்பவில்லையா?

  • அவர்களின் அழுகுரல் அவரின் செவிகளுக்கு எட்டவில்லையா?

மாற்றுத் திறனாளிகளான இவர்கள் தங்கள் ஊனத்தைப் பொருட்படுத்தாது சைக்கிள் மெக்கானிக் வேலையும், தையல் வேலையும் செய்து சுயமரியாதையோடு வாழ்ந்து வரும் இவர்களிடமே மானம் கெட்ட இடைத்தரகர்கள் லஞ்சம் கேட்டார்கள் என்றால் மற்றவர்களின் நிலைஉங்களின் யூகத்திற்கே....

  • இப்படிப்பட்ட அரசு ஊழியர்கள் பிச்சைக்காரர்களின் தட்டில் இருக்கும் காசைக்கூட விட்டு வைப்பார்களா?

லஞ்சம் வாங்குவது அன்னையை விற்று பிள்ளைக்கு உணவளிப்பது. உங்கள் பிள்ளைக்கு உணவளிக்க நாங்கள் தயங்க மாட்டோம். உங்கள் அன்னையை விற்க லஞ்சம் வாங்கும் நீங்கள் தயாரா?


_ கிறுக்கன்.
_ பூஞ்சோலை.

4 comments:

தங்கராசு நாகேந்திரன் said...

மிகுந்த வேதனை அளிக்கும் செய்தி, அதுவும் நம்மூர் இராமநாதபுரத்தில் என்னும்போது வேதனை இன்னும் அதிகரிக்கிறது.

உங்களில் ஒருவன் said...

வேதனைத் தருகிறது தங்கள் கட்டுரை, உதவ முடியாத தூரத்தில் இருப்பதால் இயலவில்லை என்னால்......

Prasanna said...

nan first time vareyn intha site(ku)
intha issue rommba veytanaiya iruku
(aana itha maaduri neraiya issue iruku )But intha Site la intha issue va display panunathuku romaba santhosam.itu maduri neeraiya Comman (News)Subject Display panungaaa. athu neeraiya payruku Help pa irukum.
tan q
Prasanna

chammy fara said...

மிகவும் மனவருத்தத்தை தர கூடிய ஒன்று சகோ
மனிதம் செத்து கொண்டிருகிறது என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்??
இதை பற்றி தெரிந்தும் என்னால் உதவ இயலாத கையாலாகாத தனத்தை நினைத்து பெருமூச்சு விடுவதை தவிர எம்மால் என்ன செய்து விட முடியும்??

Post a Comment