அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

30 December, 2010

வாழ விடுங்கள்…!காலங்கடந்து வரும்

கணவனுக்காகக் -

காத்திருக்க விரும்பவில்லை

என் மனம்.....

அடுப்பங்கரையில்

அடையாளம் தெரியாமல்

அடங்கிப்போக விரும்பவில்லை

என் மனம்.....

விதியென்று விளக்கம்சொல்லி

வம்பாய்முத்திரை குத்தப்பட்டு

வீட்டுக்குள் சிறையிருக்க விரும்பவில்லை

என் மனம்......

வாழாவெட்டி என்ற

வதை சொல்லோடு

வாடிவாழ விரும்பவில்லை

என் மனம்....

உணர்வுகளற்ற

ஊராரின் பேச்சுக்கு

ஊமையாய்உழல விரும்பவில்லை

என் மனம்...

கடந்த காலத்தை

கலைந்துபோன கனவுகளாக்கி

கற்பனைகளைக்

கண்ணீராய்க் கரைத்து -

உள்ளத்து உணர்வுகளைக்

கல்லாக்கி -

உற்றாரின்

தூற்றல்களைத்

துச்சமாய் மிதித்து

சாதிகளற்ற சாதனைகளை

சந்திக்க விரும்பும்..... ,

பேதமற்ற பெருமைகளைப்

புகழாரமாய்ப் பதிக்க விரும்பும்....,

ஆணுக்கு நிகரான

பெண்ணென்று - பார்போற்றும்

புதுமைப் பெண்ணாக - அனைவரும்

அடையாளம் காட்டக் கூடிய

அழியாச் சின்னமாய்

சீரிய நெறியோடு

சிந்தனைத் தெளிவோடு

வாழத் துடிக்கும் - என்னையும்

வாழவிடுங்களேன்....!
                                                                                  --  பூஞ்சோலை


                    


4 comments:

ஆமினா said...

பெண்ணின் வலிகள் வரிகளில்......

நல்லா இருந்துச்சுங்க

பூஞ்சோலை said...

நன்றி தோழியே...

naveen said...

wowwwwwwww,super writing,lines are great,

முல்லை அமுதன் said...

nalla kavithai.
vaazhthukkal.
mullaiamuthan
katruveli-ithazh blogsot.com

Post a Comment