அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

31 December, 2010

இதுபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவையா ?

செந்தமிழ் நாட்டு தமிழ் பெண்கள்தான் 
         புத்தாண்டு கொண்டாட்டங்ககள் களைகட்ட ஆரம்பித்துவிட்டன. நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதி உரிமையாளர்களுடன் போலீஸ் கமிஷனர் ராசேந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் கமிஷ்னர் ராசேந்திரன் கூறியதாவது :

அடடா கண்கொள்ளாக்காட்சி
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறேன். போக்குவரத்து இடையூறு இன்றி வாகனங்கள் நிறுத்த போதுமான இடவசதி செய்து கொடுக்க வேண்டும். பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது செய்யப்படுவார்கள்.
நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் திறந்திருக்க வேண்டும். அதற்குமேல் திறந்திருக்க கூடாது. நடன நிகழ்ச்சி நடத்தவேண்டுமென்றால் அந்த ஏரியா துணை கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும்.

ஓட்டல் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பட்டாசு வெடிக்க கூடாது. பெண்களை கேலி செய்யும் சம்பவம் நிகழ்ந்தால், போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மெரினா சாலையில் அதிக வேகத்தில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வீட்டில் விட கார் ஏற்பாடு :
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட நட்சத்திர ஓட்டல் நிர்வாக மேலாளர் ரதீஷ்குமார் கூறுகையில், “எங்கள் ஓட்டலில் டிஸ்கோ நடனம் கிடையாது. ஜோடியாக வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8 மணிக்குள் நீச்சல் குளத்தை மூடி விடுமாறு கமிஷனர் உத்தரவிட்டிருக்கிறார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு விட்டு போதையில் தள்ளாடிய படி வரும் நபர்களை அவர்கள் வீடுகளில் கொண்டு போய் விட 15 டிரைவர்களை ஏற்பாடு செய்து இருக்கிறோம். எங்கள் காரில் அனுப்பி வைப்போம். மறுநாள் ஓட்டலுக்கு வந்து தங்களது வாகனங்களை எடுத்து செல்லலாம்என்று கூறினார்.
                          -ஒரு நாளிதழில் படித்தது 
    மேலே உள்ள செய்தியை படிக்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு இல்லையா? இந்த நாதாரி பயமக்க குடித்துவிட்டு கும்மாளம் அடிக்க காவல்துறை பாதுகாப்பு கொடுப்பார்களாம்.கிளப் முதலாளிகள் கார் ஏற்பாடு செய்து போதையானவர்களை வீட்டிலேயே கொண்டுபோய் விடுவார்களாம்.
ஏன் ஒரு ரூம் போட்டு தங்க ஏற்பாடு செய்து கொடுக்கலாமே? போதை தெளிந்த பிறகு அனுப்பி வைக்கலாமே.(சமூக சேவை) 
 போன வருடம் கர்நாடக மாநிலத்தில் பப் எனப்படும் கேளிக்கை விடுதிகளில் ஸ்ரீராம்சேனை இயக்கம் நடத்திய பின்னி பெடல் கழட்டும் வைபவத்தை பார்த்த ஆண்களும்,பெண்களும் கொஞ்சம் உஷாராக இருங்கள் ஸ்ரீஹனுமானசேனா-ன்னு புது இயக்கம் வந்து இருக்காம் தமிழ்நாட்டுலமேலும் இந்து மக்கள் கட்சி ராஜா தயாராக உள்ளார். (எப்புடி எல்லாம் புரளிய கிளப்ப வேண்டி இருக்கு) இது போல் கேவலமான செய்கையில் இவர்கள் ஈடுபடுவதால் தான் ஸ்ரீராம்சேனா போன்ற காவி பாசிச இயக்கங்கள் தங்களை தேச பக்தியாளர்களாக அடையாளம் காட்டிக்கொண்டு தேசத்தை காக்கிறோம் பேர்வழி என்று தொடை தட்டி கிளம்பும் நிலைக்கு ஆளாகியுள்ளோம்..

   ஸ்ரீராம்சேனை நடத்திய பின்னி பெடல் எடுக்கும் வைபவம் 
செத்துப்போகல சனியனுக்கு போதை 
  சமீபத்தில் ஒரு குடிமகள் சைதாப்பேட்டையில் குடித்துவிட்டு ரோட்டின் ஓரத்தில் தன் பாய் ப்ரண்டால் படுக்க வைத்துவிட்டு போனதும் அந்த பெண்ணிடம் சாலை ஓர ரோமியோக்கள் லீலையில் ஈடுபட ரோந்து வந்த போலீசார் எல்லோரையும் தூக்கி கொண்டுபோய் உள்ளே வைத்து அர்ச்சனை செய்து அனுப்பியதும் நினைவு இருக்கலாம்.தாராளமயம் மற்றும் மேற்குலக பண்பாடு போன்ற காரணங்களால் நாட்டில் பப்-கள் கொடிகட்டி பறக்கின்ற மிகபெரிய கலாச்சார சீரழிவு,
  இதெல்லாம் தவறே இல்லை என்ற ஓர் மனநிலையை ஏற்படுத்தியுள்ளது  எனக்கு ஒரு சந்தேகம் அந்த கிளப் நடத்துபவர்களின் மகள்கள் இப்படி குடித்துவிட்டு பப்களில் (ஸ்ட்ரிபிங்) நடனம் ஆடினாலோ,இல்லை உயர் காவல் அதிகாரிகளின் மகள்கள் அரசியல்வாதிளின் மகளோ ஆடினாலோ பெற்றோர் என்ற முறையில் ஏற்றுகொள்வார்களா? ( இந்த கேடுகெட்ட கலாசாரத்தை செய்வதே பெரிய இடத்து பிள்ளைகள்தான் என்பது வேறு விசயம்)நான் மேலே குறிப்பிட்ட மக்கள் தங்களை மேட்டுகுடிகளாக நினைத்துக்கொண்டு செய்யும் கலாசார கற்பழிப்பு கொஞ்சமில்லை இவர்களை எல்லாம் நாம் லிஸ்டில் சேர்க்கவே கூடாது
     மேல சொன்ன எந்த விசயத்திலும் அடங்காமல் ஒரு குரூப் சுத்துவானுக நாம அவன் விசயத்துக்கு வருவோம்  புத்தாண்டு வந்தாலே நம்ம பயபுள்ளைக நிறைய சபதம் போடுவான் தண்ணி அடிக்கமாட்டேன் தம் அடிக்கமாட்டேன் எல்லாமே இந்த வருடத்தின் கடைசி நாளான இன்று மட்டும்தான்னு சொல்லிவிட்டு வெறித்தனமா ஒரு பாக்கெட சிகிரெட் வாங்கி ஒன்னு மாத்தி ஒன்னு பற்றவைத்து புகையை விடுற அழகு இருக்கே அடடா..அடடா....(அவனுக சபதத்தை பாராட்டியே ஆகணும்) ஆனால் என்ன ஆகும் தெரியுமா சரியா 31-12 இரவு 11 மணிக்குதான் இவங்க குடிக்கும் நிகழ்வு ஆரம்பம் ஆகும். 12 மணி ஆகுவதற்குள் குவாட்டர் சரக்கை உள்ள தள்ளிட்டு முக்கால் போதையோட இருப்பான் பக்கத்துல இருக்குறவன் கிட்ட சரக்கு பத்தலை மச்சான்னு சொல்லிவிட்டு சரியாக 12 மணிக்கு அடுத்த புல் பாட்டிலை திறந்து ஹாப்பி நியூ இயர்-னு ஒரு உற்சாக குரலில் கத்திவிட்டு அடுத்த ரவுண்டு குடிப்பான் பாருங்க மணி இப்போ 12:15 ஆக புது வருடம் போதையில் ஆரம்பம்.ஹி...ஹி... இவருக்கு போதை தலைக்கு ஏறியதும் பாக்கெட்டில் இருக்கும் தம்மை எடுத்து ரொம்ப ஸ்டைலா பற்றவைப்பார் இரண்டாவது சத்தியமும் போச்சா.
சூ..ல மிதிக்காம அடிங்க ஐயா 
ரோமியோக்கள் பார்ட்டி முடிந்து ரோட்டுக்கு வரும்போது மணி 12-30க்கு மேல் இருக்கும் இவர் சேட்டையே இப்போதான் ஆரம்பம் பண்ணுவார்.யாரையும் விடமாட்டார் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லுவார் ஆம்புலன்ஸ் போனால் கூட நிறுத்தி வாழ்த்து சொல்லுவார் பைக் எடுத்துகிட்டு நகர்வலம் ஆரம்பம் ஆகும் முக்கியமா வண்டி ஓட்டும்போது ஹாரன்-ல் இருந்து கைய எடுக்கவே மாட்டார் போகும் வழியில் உற்சாகம் தலைக்குஏறி போலீஸ் மாமாக்கு நியூ இயர் சொல்லும்போது சரியா மாட்டிகிவார்.போலீஸ் வாயை ஊதி காட்ட சொன்னா போலீஸ்காரர் கிட்ட சட்டம் பேசுவார்.இவர் பேசுனது சூடு ஏறி  இவன் போதையோடு வண்டி ஓட்டிட்டு வரான் ஐயா கேட்டா சட்டம் பேசுறான்னு இன்ஸ்பெக்டர் கிட்ட போட்டு குடுத்துடுவார் ஏட்டு ,போலீசை கலாய்த்ததால் ஜட்டியோட இரவு முழுக்க ஸ்டேஷன்ல வச்சு இடியாப்பம் குடுப்பாங்க காலையில் தான் வாங்கிய இடியாப்பம் வலி தெரியும் காலையில் போதை தெளிந்து டுட்டி மாறி வரும் வேறு போலீஸ்காரர் இடம் உட்காரும் இடத்துல பிரம்படி வாங்கி போலீஸ் ஸ்டேஷன்-ல இருந்து நொண்டி நொண்டி தல  வெளிய வரும் அழகு இருக்கே அட போங்கப்பா.
பாரில் மாட்டிய ரோமியோக்கள்
ஸ்டேஷன்ல இருந்து வெளியே வரும்போது 
இப்படி போலீஸ் கிட்ட சிக்கி சீரழிந்து வீட்டுக்கு போய் படுத்து தூங்கி கண் விழித்தால் மணி இரவு 7 மணிஆகி இருக்கும் வருடத்தின் முதல் நாள் 7.30-ல் ஆரம்பம் ஆகும் இப்போது சொல்லுங்கள் கேடுகெட்ட அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றி போலீசிடம் அடிவாங்கி சிக்கி சீரழிந்து கிழிந்து கந்தல் துணியாய் நம்மை நாம் ஏன் வதைத்து கொள்ள வேண்டும் ?
இவை அனைத்தும் மலம் தேடி திரியும் பன்றிகள் போல் பணம் தேடி திரியும் கலாச்சார அழிப்பு வியாபாரிகளின் மாயவலை இன்னும் மேற்கத்திய கழிசடை கலாச்சாரத்தை எதிர்ப்பதுபோல் பம்மாத்து காட்டும் அரசியல் வியாபாரிகளின் போடுபோக்கு நிலை (யாருக்கு தெரியும் எத்தனை பார்கள் இவர்களுடையதோ) எலும்பு கவ்வும் நாய்கள் போல் இவர்களுக்கு சேனை பிடிக்கும் அரசு இயந்திரம்,காவல்துறை,இதை மிகப்பெரிய பலமாக உபயோகிக்க காத்துக்கிடக்கும் ராமகோபாலன்,ராஜா போன்ற மரண வியாபாரிகள் கேளிக்கைகள் கும்மாளங்கள் இவை அனைத்தும் தனி மனித சுதந்திரம் என்பதுபோல் கலாச்சாரம் மறந்து குடை பிடிக்கும் இயக்கங்கள்.மேலும் கடந்த வருடங்களில் மிருகங்கள் கூட வெட்கம் கொள்ளும் அளவுக்கு நடந்த காம கூத்தை யார் யார் எல்லாம் ஆதறிக்கின்றீர்களோ உங்களுக்கெல்லாம் கிருக்கனிடம் இருந்து ஒரே ஒரு கேள்விதான்.
 உங்கள் அக்காள்,தங்கைகள் குடித்துவிட்டு போதையில் ரோட்டில் உருண்டு கிடந்தால்,இல்லை வேறு ஆணுடன் செக்ஸ் நடனம் ஆடினால் அதை நீங்கள் ரசிப்பீர்கள் என்றால் அது என் தங்கையின் அக்காவின் சுதந்திரம் என்று நீங்கள்  முற்போக்கு காரணம் சொன்னால் இந்த பதிவு உங்களுக்கு அல்ல.
 இது என் தமிழ்நாடு என் மண் எங்களுக்கென்று கலாச்சாரம் இருக்கின்றது அது உடையில் எங்களை மாற்றலாம் ஆனால் எண்ணங்களில் என்றுமே எங்களை மாற்றாது நாங்கள் பிறன் மனை நோக்கா பேராண்மை பாடிய வள்ளுவன் பிறந்த மண்ணில் வாழ்பர்வர்கள் என்று நினைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே 
-கிறுக்கன்
சேட்ஜி: கிறுக்கன் நம்பல்கி போலீஸ் பார்த்தாலே பயம் நம்பல் நீ இன்னா சொன்னாலும் கேக்குறான் சேட் பப்க்கு போறான் இல்லே. 
(சேட்டு நீ ஜட்டி போடாம போ அப்போவேறு வழியே இல்ல பேன்ட் போட்டுதான் நிக்க வைப்பாங்க இல்லைனா காப்பர் பாட்டம் ஜட்டி ஒன்னு வாங்கி போட்டுக்கோ அடிச்சாலும் வலிக்காது) 

3 comments:

ஆமினா said...

விழிப்புணர்வு பதிவு அருமை

☀☃ கிறுக்கன்☁☂ said...

நன்றி..நீங்க தான் அருமைன்னு சொல்லுரிங்க எல்லோரும் என்னை மிரட்டுராங்கோ எனக்கு z பாதுகாப்பு கொடுக்க சொல்லுங்கோ

naveen said...

krikka un samuga akkarai potra thagundhadhu arputhamana karuthukkal ellam ok,setji yai en jatty podavenam illana copper bottom jatty poda solringa p[olice karen kadai kavab seiyava hahaha

Post a Comment