அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

23 December, 2010

♥♀ ♥♀ ♥♀ ♥ நண்பர்கள் ♥♀ ♥♀ ♥♀ ♥


புவியில் பூக்கும் அழகிய
நறுமனமுள்ள பூக்கள் !

மனம் எனும் வானில் 
உயர உயர பரக்கச்செய்யும்
வண்ணமயமான சிறகுகள் !

சோதனை எனும் சூழ்கடலை 
சுலபமாய் கடக்கச்செய்யும்
பலம் பொருந்திய துடுப்புகள் !

தடை எனும் பெருமலையை
சுக்குநூறாய் தகர்த்தெரியும்
உறுதியான உளிகள் !

நம்மை அழகுற 
செதுக்கும் சிற்பிகள் !

நம்மின் குறைகளை 
நேரடியாய், நேர்த்தியாய்
பிரதிபளிக்கும் கண்ணாடிகள் !

நம் புகழை எட்டுதிக்கும் 
பாடித்திரியும் வானம்பாடிகள் !

சிரிப்பு, அழுகை, ஏற்றம், இரக்கம்,
வெற்றி, தோல்வி, வாழ்வு, சாவு
என எல்லாவற்றிலும் மனதார 
பங்கு கொள்ளும் பங்குதாரர்கள் !

சுடர் விட்டெரியும் ஆதவனாய் 
குளிர்ந்த முழு மதியாய்,
கண்களை இமைக்கும் நட்சத்திரங்களாய்,
பாரம் தாங்கும் புவியாய்,
உயிர் வாழ செய்யும் சுவசக்காற்றாய்,
இன்னும் யாதுமாகியாய் நண்பர்கள் !

அன்னையின்றி,ஐயனனின்றி,
அருமை உடன்பிறப்புகள் ஒன்றுமின்றி
காதலுமின்றி- வாழுமே !
உயிர் - நட்பின்று வாழாதது !  

                           -நவீன மென்மையானவன்   

9 comments:

Muralikrishnan Chinnadurai said...

அன்பு மறு உருவம் அன்னை
அன்னை அன்பின் மறு உருவம் நண்பர்களின் நட்பு
கவிதைகள் அற்புதம்
வாழ்த்துக்களுடன்
கிருஷ்

karthick said...

wow really great poem, naveen u catch all over world tamilian heart's as friend and poet

- by karthicksmart81

Ramji said...

கலக்கிட்ட நண்பா !!!!

நண்பன்டா !!!! நண்பன்டா !!!!

Law student said...

மென்மை மென்மையானது....
மேன்மை மேன்மையானது....
நவீன்... இரண்டுமான நண்பரே... அருமை !!

kevinkevin said...

Friendship isn't always easily described,but NAVEEN SOFT you described it,really awesome,This beautiful poem explores just one of the many gifts given by our closest friends,HATS UP to NAVEE SOFT :-)

Trishadevi said...

Kavithai elutha therinthavan mattume kavithaiai
vimarsikka vendum enpathu erpudaiyathu alla.
Thiraipadam uruvakupavan mattume athai vimarsikkavum vendum enru vathiduvathu arivuudayor seyal agathu.Nalla kalai rasanai ullavane vimarsikka thakuthi anavan enpathu enthu karuthu.
Itha vakaill enn tholan oru maethai.......Enn nanbaen da!!!!!

Anonymous said...

நட்பின் இலக்கணம் மற்றும் அதன் தூய்மையை அருமையாய் வெளிபடுத்தி இருகிறாய்.
சொனா

kavithai said...
This comment has been removed by the author.
jenifer said...

wow super naveen. uyirum unarvum kalanthathu thaan natpu.nanbargalai patri kavithai eluthi natpukke uyir kudutha ungalai vaalthukiren. menmelum kavithai velivara en vaalththukkal... god bless u my dear frnd..

Post a Comment