அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

23 December, 2010

காக்டெயில்


வெங்காயம் விலையேற்றம்
டமில்நாட்டுல வெங்காயம் கிலோ 80 ருபாய் தமிழ்நாட்டில் மழை அரசுக்கு எதிராக எதிர் கட்சிகளோடு சேர்ந்து சதி செய்தது தான் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை ஆளும் கட்சியின் கலைஞர் தொலைக்காட்சி
வெளியிட்டது.வழக்கம் போல் திருக்குவளை தந்த தெய்வ மகன் அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த தங்க மகன், கேரளாவில் வருடா வருடம் மழையினால் வெங்காயம் மட்டுமல்ல எல்லா வகை உணவு பொருட்களும் யானை விலை இருக்கும் தமிழகத்தில் இந்த வருடம் தான் இப்படி உள்ளது என் உடன் பிறப்பே நாங்கள் தான் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கின்றோமே அதை வைத்து கஞ்சி காய்ச்சி குடித்து நாங்கள் வழங்கிய இனாம் டி.வி,யில் "மானாட மார்பாட" பார்த்து இந்த மழை காலத்தை கொஞ்சம் குஷியாக மாற்றி கொள்ள கூடாதா? வெங்காயம் உபயோகிப்பதற்கு பதில் முட்டை கோஸ் உபயோகிக்க கூடாதா? விரைவில் முட்டை கோஸ் மெகா சைஸ் வெங்காயம் என சட்டம் இயற்ற அனைத்து ஏற்பாடும் செய்யப்படும் என தன் வழக்கமான அறிக்கையாக வெளியிடுவார் என்று நம்புகிறேன்.


  ஆனால் எனக்கு என்னவோ பாகிஸ்தான் தீவிரவாதிகள் புலிகளோடு சேர்ந்து மழையை தமிழ்நாட்டின் மேல் ஏவி தமிழகத்தில் நிலவி வரும் பொருளாதார சீரமைப்பை குலைக்க நினைக்கிறார்களோ என்ற ஐயம் உள்ளது.சதிகார கும்பல்கள் என்ன நினைத்தாலும் தமிழகத்தை மழையை அனுப்பி எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது காரணம் அர்ஜுன், வியசயகாந்தம்,சரத்குமார்,அருண்பாண்டியன் என தீவிரவாதிகளை ஓட ஓட விரட்டிய ஹீரோக்கள் வாழும் பூமி இது என்பதை எச்சரிக்கையாக சொல்லிக்கொள்கிறோம்...
  இதை விட பெரிய கொடுமை என்ன தெரியுமா? வெங்காயத்தின் விலை ஏற்றம் காரணமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வெங்காயம் கிடைக்கவில்லை என்று ஒருவர் ரொம்ப சாதாரணமாக கலைஞர் டி.வியில் பேட்டி கொடுத்தார் பாருங்கள் "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மடியில் வை"-ன்னு ஒரு மொழிவழக்கு தான் நினைப்பு வந்தது போங்கள்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 

                                                          வெங்காயம் கதை 

ஒரு ஊருல ஒரு ஐஸ் கிரீம்,தக்காளி,வெங்காயம் மூணு பேரும் நல்ல நண்பகர்கள் ஒரு நாள் மூணு பேரும் ஆத்துக்கு குளிக்க போனாங்க சொல்ல சொல்ல கேட்காம ஐஸ்கிரீம் ஆத்துல இறங்கி குளிக்க போக அப்புடியே கறைஞ்சி போயிடுச்சி. தக்காளியும் வெங்காயமும் ஓ..ன்னு ஒரு மணிநேரம் புரண்டு புரண்டு அழுதுட்டு வீட்டுக்கு போக வழியில லாரியில அடிபட்டு  தக்காளி நசுங்கி  போச்சு வெங்காயத்துக்கு ஒரே அழுகை துக்கம் தொண்டையை அடைக்க உடனே கடவுள கூபிட்டுச்சு கடவுளும் ஒரு கையில் சக்கரம் மறு கையால ஆசிகுடுக்கும் போஸ்ல ( இன்னும் நிறைய கை இருக்கு பா )  வந்து மகனே உன் தவத்தில் மெச்சினோம்னு சொல்லுற மாதிரி என்ன வரம் வேண்டும் கேள்னு சொன்னார் அதுக்கு வெங்காயம் என் நண்பர்கள் தக்காளியும்,ஐஸ் கிரீமும சாகும்போது நான் அழுதேன் நான் சாகும்போது யாரும் அழ மாட்டங்கலேன்னு சொல்லுச்சு அதுக்கு காட் கவலை படாதே நீ சாகும்போது உன்னை கொல்பவர்கள் அழுவார்கள்னு சொன்னாரு.
ஆனா பாருங்க இப்போ வெங்காயத்தை கொல்ல வேண்டாம் நினைத்தாலே அழுகை வருது.
(எப்புடியோ ஒரு நல்ல கருத்தை சொன்ன திருத்தி இருக்கு பா....ஹி ...ஹி .  )

       இனிமேல் யாராவது வெங்காயம் அது இதுன்னு பேசிகிட்டு இருந்திங்க பிச்சு....பிச்சு.... ஒழுங்கா கடைகளுக்கு போய் முட்டை கோஸ் வாங்கி மெகா சைஸ் வெங்காயம் போல் நினைத்து அதை பொடிசாக வெட்டி உபயோகிக்கவும்.

சேட்ஜி !
  ஹரே கிறுக்கன் நிம்பல்க்கி என்னா மா அறிவுபா முட்டை கோஸ் வாங்கிகிட்டு போறான் பா சேட்டு வீட்டுக்கு கஸம்சே(சத்தியாமா ன்னு சொல்லுறாரு ) இனி வெங்காயம் வாங்குறான் இல்லே.அப்புறம் ஒரு முக்கியமான மேட்டர் உன்ன டமில்நாட்டுல தேடுராங்கோ ஆஸ்கார் அவார்ட் மாதிரி பாஸ்கார் அவார்ட் குடுக்க போராங்கோ அதை சேட்டு ஏற்பாடு பண்றான்.
(சேட்டு வேணாம் சேட்டு நீ சொன்னதே போதும் அண்ணிகிட்ட முட்டை கோஸ் வாங்கி குடுத்து சாம்பார் வச்சி சாப்பிடு போ)
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 
மரம் நடுவோம் உலகம் காப்போம் !


  அந்த நண்பர் எனக்கு யாஹூ அரட்டை அறையில் தான் பழக்கம் நிறைய விசயங்கள் பற்றிய தொலைநோக்கு பார்வை தெளிவான சிந்தனை கொண்டவராக இருந்தார் கிறுக்கன் வலைப்பூ பற்றி நானும் நண்பன் நவீனும் அவரிடம் பேசியபோது எல்லோருக்கும் ஒரே அலைவரிசை போல் உணர்ந்தோம் வலைப்பூ-வின் வடிவமைப்பு மற்றும் நிறைய உதவிகள் செய்ய முன்வந்த ஈகிள் இளங்கோ அவர்களை நன்றியோடு இங்கே குறிப்பிட  விரும்புகிறேன். கடந்த பதினைந்து வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள    ஒரு  அனல் மின்நிலையத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் இவர் சிறந்த சுற்றுசூழல் ஆர்வலர் என்பதை இவரிடம் பேசியபோது புரிந்துகொள்ள முடிந்தது
      
நான் மறுமுறை இளங்கோ அவர்களிடம் பேசியபோது ஓசோன் ஓட்டை பற்றி சொன்னார் அந்த ஓட்டை சரியாக  தெற்காசிய நாடுகளின் மேலேயும் கடல் நடுவிலும் குறிப்பாக இந்திய பெருங்கடல் மேலே அதிகமாக ஒசோன் மண்டலம் பாதிப்புக்குள்ளாகி இருப்பதையும் கவலையோடு குறிப்பிட்டார்அதனால் ஏற்படபோகும் பாதிப்பை பற்றி நினத்த போது அதிர்ச்சியாக இருந்தது அப்படி என்ன பாதிப்பு என கேட்டால் தலை சுற்றும்.. 
      புவியின் வெப்பநிலை அதிகரிப்பால் வான்மண்டலத்தின் மேற்பகுதியில் உள்ள ஓசோன் படலம் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. வளிமண்டலத்தில் 10 கி.மீ முதல் 50 கி.மீ வரை பரவியுள்ள ஸ்ட்ரேட்டோஸ்பியர் என்ற பகுதியில் உள்ள இந்த ஓசோன் படலம்தான் ஒரு திரை போல் செயல்பட்டு புவியை சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து காக்கிறது. அப்படலத்தால் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான புற ஊதாக்கதிர்கள் உள்வாங்கப்பட்டு தடுக்கப்படுகின்றன. அவ்வாறு இல்லாமல் அவை நேரடியாக பூமியை வந்தடைந்தால் மனிதர்களளுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தோல் புற்றுநோய், பார்வை இழத்தல், உடலின் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் பல்வேறுவிதமான தொற்று நோய்கள், ஒவ்வாமை (அலர்ஜி) போன்றவை ஓசோன் துளையால் ஏற்படக்கூடிய அபாயங்கள். மேலும் மரபியல் ரீதியான பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதை இளங்கோ அவர்கள் சில இணைய முகவரிகள் கொடுத்து பார்க்க சொன்னார் அவரும் சொந்தமாக  http://kashmir2kanyakumari.blogspot.com/ என்ற வலைப்பூவை துவங்கி ஓசோன் மண்டலம் பூமி வெப்பமயமாதல் பற்றியும் சுற்றுசூழல் மாசுபடுவது பற்றியும் எழுத இருக்கின்றார்.

 அவரின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வலைப்பூ சிறக்க வாழ்த்துக்கள்.





ஓசோன் படுகையில் ஏற்பட்ட துளை 1980 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.வருடம்தோறும் செப்.16 ம் தேதியும் ஓசோன் மண்டல பாதுகாப்பு தினமாக கடைபிடிக்க படுகிறது.

 மேலும் ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்ட துளைக்கு காரணம் என்ன தெரியுமா? சாதாரணமாக நம் வீட்டில் உபயோகிக்கும் குளிர்சாதன பெட்டியும் (பிரிட்ஜ்) மற்றும் குளிரூட்டி (A/C)  களில் இருந்து வெளியேறும் கார்பன் மற்றும் வாகனங்களிருந்து வெளியேறும் புகை இன்னும் தொழில்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையும் தீயணைப்புக் கருவியில் உபயோகிக்கப்படும் `ஹேலான் (Halon) வாயுவும்.முக்கியமாக குளோரோ ப்ளோரோ கார்பன் இவையே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளைக்கு முக்கிய காரணமாகும்.இன்னும் வளர்ந்த நாடுகள் ஓசோனில் ஏற்பட்ட துளைக்கு முக்கிய பங்காளிகளாக இந்தியாவையும் சீனாவையும் குற்றம் சாட்டுகின்றன காரணம் இந்தியாவிலும் சீனாவிலும் பெருகிவரும் தொழிற்சாலைகளும் வாகனங்கள் வெளிவிடும் புகையும் முக்கிய காரணமாகும்



சரி நம்மால் ஏற்பட்டதாக சொல்லப்படும் இந்த எதிர்கால பேரழிவை எப்படி தடுப்பது ஒன்றும் பெரிதாக செய்ய வேண்டாம் 10 மரக்கன்றுகள் வாங்குங்கள் உங்கள் தோட்டத்தில் நடுங்கள் தெரிந்த நண்பர்கக்ளையும் வாங்க சொல்லுங்கள் நகரங்களில் உள்ளவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்க்க முடியாத சூழல் இருந்தால் நிச்சயமாக கிராமத்தில் உறவினர்கள் இருப்பார்கள் அவர்களிடம் கொடுத்து வளர்க்க சொல்லுங்கள்.





ஏன் மரம் வளர்க்க வேண்டும் என்றால் மரங்கள் கடுங்காற்று மற்றும் சூறாவளிகளுக்கு தடுப்பாக செயல் படுகின்றன மரங்கள் CO2 ஐ (கார்பன் டை ஆக்ஸைடு) எடுத்துக்கொண்டு உயிர் வாழத் தேவையான உணவு, ஆக்ஸிஜன், நீர் போன்ற பொருள்களை ஒளிச்சேர்க்கை (Photo Synthesis) மூலம் கொடுக்கின்றன என்பதை அறிவோம். அதே சமயம் புவி வெப்பமடைதலுக்குக் காரணமாக CO2 எடுத்துக்கொண்டு காற்று மண்டலத்தைச் சுத்தம் செய்யும் வேலையையும் செய்கிறது. ஒவ்வொரு மரமும் தன் தன்மைக்கு  தகுந்தாற்போல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு 500 டன் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொள்கின்றது. மேலும் கார்பன்,புகை போன்றவற்றை உட்கொள்ளும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன இந்த முக்கிய பணி ஓசோனில் ஏற்பட்டுள்ள துளை மேலும் பெரிதாகமழும் ஓசோன் துளை சுருங்கி மறையும் அற்புத பணியும் செய்கின்றன 2075-ம் ஆண்டு ஓசோனில் ஏற்பட்டுள்ள துளை மறைய வாய்ப்பு உள்ளாதாக நாசா தெரிவிக்கிறது 
 .மேலும் உயிரினங்கள் இந்த பூமியில் வாழ தேவையான உணவு ,பிராண வாயு இன்னும் எல்லாவற்றிற்கும் ஆதராமான நீரை மரங்கள் மழையாக நமக்கு பெற்று தருகின்றன.இந்த பிரபஞ்சம் நமக்கு கிடைத்த பொக்கிஷம் இதில் நாம் அனுபவித்த இந்த இனிய வாழ்வை நமக்கு பின்னால் வரும் இளந்தளிர்களாகிய நம் சந்ததிகள் அனுபவிக்க வேண்டுமா? ஆம் என்றால்! பசுந்தளிர்களை பூமியில் நடுங்கள் அவை நம் வாரிசுகளுக்கு வளங்களையும் ஆரோக்கிய வாழ்வையும் தரும்.


சேட் ஜி :  ஹரே கிறுக்கு சைத்தான் நீ கொடுத்த செடிய வளர்த்து நிம்மல போலீஸ்காரன் புடிக்கிறான் நம்ப கைல நீ நல்ல செடின்னு சொல்லி கஞ்சா செடி குடுத்து இருக்கே ? 
கோவப்படாத சேட்டு ஏதோ தப்பு நடந்து இருக்கு அடுத்த தடவை வேற செடி தரேன்  
சேட் ஜி :  வேணாம் நிம்பல் செடி தர வேணாம் சேட்டு வாங்குறான் வளர்க்குறான் இனி உன்ன டமில்நாட்டுல பார்த்தா சேட்டு விடுறான் இல்லே 
அப்படி வா வழிக்கு சொந்தமா வாங்கி நடு இல்லைன்னா தன்னார்வ தொண்டு நிறுவனகள் நிறைய இருக்கு அவங்க கிட்ட கிடைக்கும் அடுத்த காக்டெயில்ல அவங்க முகவரி எல்லாம் சொல்லுறேன் வாங்கி நடு என் கிட்ட செடி கேட்ட இப்புடி தான் ஆகும் ....
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 


பார்த்து ரசித்தது 


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 
ஊறுகாய்      அசைவ ஜோக் (18 +)


(அது என்ன ஊறுகாய்-னு நினைகின்றீர்களா?என்னதான் காக்டெயில் பாரின் சரக்கு அடிச்சாலும் நமக்கு சைடுல 50 பைசாக்கு ஊறுகாய் இருந்தா களைகட்டும் விருந்து அதான் ஹி..ஹி..)
நீதிபதி சர்தார் ஒரு வயதான விலை மாதுவின் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார். அவள் விபச்சார வழக்கில் கையும் களவுமாக பிடிக்கப்பட்டிருந்தாள். தண்டனை கொடுக்கும் முன் ஒரு சிறு இடைவேளை விட்டுவிட்டு, சர்தார் நீதிபதிகளின் ஓய்வு அறைக்கு (சேம்பர்ஸ்) சென்றார்
அங்கே சர்தார் சக நீதிபதி எக்ஸ்-ஐ சந்தித்தார்.
சர்தார் எக்ஸ் இடம் கேட்டார்: ஒரு அறுபது வயது விலை மாதுவுக்கு என்ன கொடுக்கலாம்?”
எக்ஸ் கொஞ்ச நேரம் யோசித்தார், பிறகு சொன்னார் : அதிக பட்சமா, ஒரு பத்து ரூபா இல்லைனா பதினைந்து ரூபா கொடுக்கலாம்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 
நண்பர்களே! உங்கள் கருத்துக்கள் மட்டுமே எமக்கு ஊக்கம் தரும் எம் எழுத்துகள் பிடித்திருந்தால் கருத்துரை எனும் பெட்டியை கிளிக்கி (கருத்து கந்தசாமியாக)கருத்து சொல்லுங்கள் ......

2 comments:

நவீன் said...

ஹலோ கிறுக்கன் வெங்காய கதைகள் உங்க நியாயமான ஆதங்கத காட்டுது,மரம் நடுவோம் உங்க சமுக ஆர்வத்தை காட்டுது,
இருந்தாலும் செட்ஜி மரத்த ஒ.சி-ல கேட்டதுக்கு கஞ்ச செடி ஓவர் ர தெரியல,
தமிழ் நாட்டு மக்கள் ஒ.சி-இல்லான ஓட்டே போடமாட்டாங்க,நம்ம அரசியல் வழி காட்டிங்க காட்டின வழி,(வாங்கிக்கோ,வாய பொத்திக்கோ)
இத பத்தி எல்லாம் எழுது பா,என்ன மாறி தினம் வரவனுக்கு இவ்வளோ எல்லாம் பத்தாது நைனா,

rashmi said...

hi friends...
Naveenin kavithaigalai patri koora vendum endraal..adhu anuvai thulaithu athanul ezhkdadalai pugathi endru...nunmayana vishayangalai menmayaga eduthu solvathil naveen softukku "sollin selvan" endru pattam vazhanga vendum ...
krishnarukku kuselanaai...koperunchozhanukku pisiraandhayaraai...engalukku natpin ilakkanamaagi nenjil niraindhu anbil kalandhu idhyathul irangi nirkum naveen avargaludaya ezhuthukkal natpennum kaatril vilai sugamaai sugathil urum payanaai..nammai negizha cheigiradhu...udukkai izhandhavan kai pol udhava thudikkum un ullathirukku vanakkangal...uruga vaikkum un kavithaigal thodara vaazthukkal

unnaininaithu muthu Kumar

Post a Comment