அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

01 December, 2010

நந்தலாலா

       படத்தை பற்றிய பகிர்தலுக்கு முன் மிஷ்கின் பற்றி கொஞ்சம் ....
எல்லா ஊடகமும் கிழித்து தொங்க விட்ட விஷயம் தான் மிஷ்கின் உதவி இயக்குனர்களுக்கு படிக்கும் ஆர்வம கிடையாது அவர்கள் ஏதும் தெரியாமல் இருகிறார்கள் என்று அப்பா டக்கர் மாதிரி பேசிவிட்டு 1999 -ல் வெளிவந்த Kikujiro என்ற ஜப்பானிய மொழி திரைபடத்தை அப்படியே தமிழில் தந்து இருக்கிறார்.
படைப்பாளிகளுக்கு கர்வம்,திமிர்,ஆனவம் எல்லாமே இருக்கும் இந்த போதை நிறைய பிரம்மாகளை காணாமல் ஆக்கியுள்ளது......அதிக இழப்புகளை தந்துள்ளது.....இதை மிஷ்கின் தெரிந்து கொள்ளவேண்டும்.
    இப்படி எல்லாம் நாம் பேசினாலும் மிஷ்கின் இந்த படத்தில் தான் ஒரு படைப்பாளி என்பதை நிரூபித்து இருக்கிறார். 
    அப்படி என்னதான் படத்தில் கதை......
       இரண்டே வரிதான் பாஸ்கர மணி மனநல காப்பகத்தில் இருந்து தப்பித்து தாயை தேடி போகும் மனநலம் பாதிக்க பட்டவன் தன்னை இங்கே சேர்த்துவிட்டு போனவள் தன்னை வந்து பார்க்கவில்லையே என்ற கோபத்தில் அம்மாவின் கன்னத்தில் அறைந்து தன்னை ஏன் வந்து பார்க்கவில்லை என்று கேட்கவேண்டும் ,தன் தாயை புகைப்படத்தில் மட்டுமே பார்த்து வளர்ந்த அகி என்ற சிறுவன் தன் அம்மாவை நேராக பார்த்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும். இருவரும் வழியில் சந்தித்து ..தங்கள் தாயை தேடி நடந்தே செல்கிறார்கள்.தங்கள் பயணத்தில் வழியில் இவர்கள் சந்திக்கும் மனிதர்கள்,இறுதியில் தங்கள் அம்மாக்களை பார்த்தார்களா என்பதுதான்.

   என்னை பொறுத்தவரை இந்த படத்தின் ஹீரோக்கள் இரண்டு பேர் கேமராமேன் மகேஷ்முத்துசாமி,இசைஞானி இளையராஜா. 

மகேஷ்முத்துசாமியின் கேமரா வியக்க வைக்கும் காட்சி அமைப்பு மேலும் இந்த படத்தில் பார்த்த மாதிரி தமிழ்நாட்டின் சாலைகளை இவ்வளவு அழகாக வேறு படங்களில் பார்த்த நினைவு இல்லை.தார் சாலைகளையும் ஓரத்தில் இருக்கும் செடிகளையும் அவ்வளவு அழகாக காட்டி கண்ணில் பட்ட எல்லாவற்றையும் அழகாக தன் கேமராவில் சுட்டு தள்ளி இருக்கிறார்.
    இளையராஜா உயிரை சிறகாக்கி காற்றில் பறக்கவைக்கும் இசை ,படம் முழுவதும் ராஜ்ஜியம் நடத்தி இருக்கிறார்.தாலாட்டு கேட்கத்தானே பாடலும் அநாதை மட்டும் பாடலும் மனதில் நிற்க்கும்.நிறைய இடங்களில் காட்சி பேசவேண்டும் என்பதால் அமைதி மட்டுமே... 
    பாஸ்கர மணியாக மிஷ்கின் வித்தியாசமான உடல்மொழி, நடை ஆனால் வசன உச்சரிப்பில் மட்டும் அஞ்சாதே குருவி கேரக்டரை நினைவு படுத்துகிறார்.யாரவது இவருக்கு பேண்டை கட்டிவிட மாட்டார்களா என நம்மை எதிர்பார்க்க வைக்கும் நடிப்பு,மிரட்டும் தொனியில் பேசிவிட்டு அவர்கள் சூடானதும் பயந்து பம்முவதும்,மெண்டல் என்று சொன்ன ஆட்டோ காரரை புரட்டி எடுப்பதும்,அதே வார்த்தையை சொல்லும் அகியை அடிக்கபோய்   இயலாமையில் அழுவதும் எல்லா குறைகளையும் மறைத்து விடுகிறது. 

  அகி என்னும் பாத்திரத்தில் சிறுவன் அசுவத் ராம் எல்லோரையும் மாமா,தாத்தா என கூப்பிட்டு அவன் பயணத்தில் நம்மையும் அவனோடு அழைத்து செல்கிறான்.
 ஸ்னிக்தா கத்தாழை கண்ணால என்று குலுக்கிய நடிகையா இது? தன் வாழ்க்கை தடம் புரண்டு விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டதை அவர் சொல்லும் காட்சியும் இடமும் வசனமும் ஸ்னிக்தா மனதில் நிற்பார் கத்தாழை பாடலையும் மீறி ...
அம்மாவாக ரோகினி மொட்டை அடித்து நடித்து இருக்கிறார். மற்றபடி படத்தில் வரும் ஆட்டோ டிரைவர,மாட்டுவண்டி காரர்,ஊனமுற்றவர் என மனதில் நிற்கின்றனர்.

நந்தலாலா ராஜாவோடு ஓர் இசை பயணம்....