அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

14 August, 2010

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் மரணத்திற்கு யார் காரணம்?

எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லைநாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.
                 - டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

  இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் சிற்பி,அமுக்கப்பட்ட்ட,நசுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போர் வீரர்.டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்.
ஒரு வாழ்வு,அது ஓர் சகாப்தம் எனத் தன் வாழ்வை அமைத்துக் கொண்ட சாதனை சிற்பி டாக்டர் அம்பேத்கர்.
இந்த சிந்தனை செம்மல் டிசம்பர் 6,1956 அன்று நடு இரவில் இறந்தார்கள்.
டிசம்பர் 5,1956 அன்று வரை நல்ல உடல் நிலையோடு இருந்த அம்பேத்கர்
அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்ற வினாவை ஏறத்தாழ 17 ஆண்டுகள் அவருடைய தனிமைச் செயலாளராக இருந்த (Private Secretary) நானக் சந்த் ராட்டு (Nanak Chand Rattu) என்பவர் எழுப்பியுள்ளார்.
டாக்டர் அம்பேத்கர் நடு இரவில் மரணமடைந்தார்கள். ஆனால் அந்தச் செய்தியைத் தனிமைச் செயலாளருக்கு சொல்லப்படவில்லை.
டாக்டர் அம்பேத்கரின் ஒரே மகன் யஷ்வந்த் ராவ் அம்பேத்கர் அவர்களுக்கும் தெரியபடுத்தவில்லை.
இவர்களெல்லாம் டாக்டர் அம்பேத்கர் மரணமடைந்தார் என்ற செய்தியை இந்திய வானொலி வழியாகத் தெரிந்திட வேண்டியிந்த்து.
அம்பேத்கர் அவர்களுக்கு தினமும் அதிகாலையில் தேநீர் கொண்டு தருபவர் அம்பேத்கரின் அறைக்கு டிசம்பர் 6,1956 அன்று காலையும் தேனீர் கொண்டு வந்திருக்கிறார்.அறையில் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
ஆனால் அந்த வேளையாள் அனைத்துத் தடைகளையும்  தாண்டி தேநீரை கொண்டு உள்ளே சென்றார்.ஆனால் அறையில் டாக்டர் அம்பேத்கர் இறந்து கிடக்க்க் கண்டு அதிர்ந்து போனார்.
டாக்டர் அம்பேத்கருக்கு தேநீர் கொண்டு செல்லவேண்டாம் என்று தடுத்தவர்கள்,அதற்குக் காரணம் சொல்லாதது ஏன்?
இந்த வினாக்கலை எல்லாம் எழுப்பிய அம்பேத்கரின் தனிமைச் செயலாளர் நானக் சந்த் ராட்டு பதிலை அவரே சொல்கிறார். "அம்பேத்கர் மெத்தத் தயக்கத்தோதடு இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்ட சவிதா அம்பேத்கர்அம்பேத்கரால் மிகவும் வெறுக்கப்பட்ட மருத்துவர் மால்வான்கர்”.இதனை அம்பேத்கரின் தனிமைச் செயலாளர்,தான் எழுதி வெளியிட்ட  அம்பேத்கரின் கடைசி வருடங்கள் (1997) (Last Few Years Of Dr.Ambedker) என்ற ஙாலில் குறிப்பிடுகிறார்.
நமக்கெல்லாம் அதிர்ச்சியாகவும்,ஆச்சர்யமாகவும் இருக்கலாம்.ஆனால் ஒன்று மட்டும் உண்மை, சவிதா அம்பேத்கர் மீதும்,மருத்துவர் மால்வான்கர் மீதும் படிந்த கறைகள் நிச்சயம் அகலாது.
தலித்கள்,பௌத்தர்கள்,ஆகியோரும் நாட்டு மக்களும் மன்னிக்கமாட்டார்கள்.
(Page:213-Last Few Days Of Dr.ambedker)   
அம்பேத்கர் அவர்களின் தனிமைச் செயலாளர், டாக்டர் அம்பேத்கரின் இரண்டாவது மனைவி சவிதா,அவருடைய மருத்துவர் மல்வால்கர் ஆகியோரை ஏன் சந்தேகப்படுகின்றார்.
அதனை நானக் சந்த் ராட்டு அவர்களே சொல்லக் கேட்போம்.
தேசம் அதிரச் செய்த டிசம்பர் 5,1956 அன்று இரவு நான் டாக்டர் அம்பேத்கர் அவர்களிடம் பணிமுடிந்து வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டேன்.அப்போது அவர் நன்றாகத்தானிருந்தார்.அசாதரனமாக எதுவும் இல்ல்லை அவரது ஆரோக்கியத்தில்.பிறகு நான் என்னுடய (சைக்கிளில்) மிதி வண்டியில் வாசலை கடந்து செல்ல முயன்றேன்.அப்போது அவர் என்னை திரும்ப அழைத்தார்கள்.என்னிடம் தட்டச்சு (டைப்) செய்து வைத்திருந்த கடிதங்களை அலமாரியில் இருந்து எடுக்கச் சொன்னார்கள் அம்பேத்கர் அவர்கள்.அந்த கடிதங்கள் 1.புத்த சாசனா கவுன்சில் ரங்கூன் (பர்மா) வுக்கு எழுதிய கடிதம் 2. ஆச்சார்யா பி.கே.அட்ரி, எஸ்.எம். ஜோஷி ஆகியோருக்கு எழுதிய கடிதம் 3. புத்தரும் அவருடைய தருமம் என்ற நூலுக்கு எழுதிய முகவுரையும்,அறிமுகமும்.இவற்றை அவரது படுக்கைக்குப் பக்கத்திலிருந்த மேசை மீது வைக்கச் சொன்னார்.அவர் என்னிடம் நான் இவற்றையெல்லாம் மீண்டும் ஒரு முறை திரும்பப் பார்ப்பேன் என்றார்.அவற்றை மீண்டும் பார்க்க வேண்டும் என அவர் கூறியதிலிருந்து அவர் எவ்வளவு இருந்தார் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.வேண்டுமானால் நான் இங்கேயே தங்குகிறேன் என்றேன்.இல்லை நீ வீட்டுக்குப் போய்விடு நான் நன்றாகத்தானிருக்கிறேன், காலையில் சற்று நேரமே வந்து விடுஎன்றார்.
நான் எடுத்து வைத்த கடிதங்களை காட்டி இவற்றை நாளை மறவாமல் அனுப்பிவிட வேண்டும் என்றார். இப்படி நன்றாக இருந்த,நாளை பணிகளை இன்றே பார்வையிட்ட அம்பேத்கர் திடீரென இறந்துவிட்டார் என்பதை நம்மால் நம்ப இயலவில்லை.
டாக்டர் அம்பேத்கரின் மருத்துவராக பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருந்த டாக்டர் மாதங் ஜி.மால்வான்கர்,டிசம்பர் ,6.1956 அன்று மிகவும் நக்கலாக இப்படி பேசினார்.நேற்றிரவு டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய ஆரோக்கியத்தை நன்றாக அனுபவித்தார்கள்என்றார்.
அந்த டாக்டர் ஏன் இப்படி பேசிட வேண்டும்?
டாக்டர் அம்பேத்கரின் மரணம் முன்னரே திட்டமிடப்பட்டதா?
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மரணித்த சூழல் மும்பையிலிருந்து வெளிவந்த பத்திரிகைகளைப் போலவே உலகப் பத்திரிகைகளையும் உலுக்கிற்று.
மராட்டிய பத்திரிகைகள் வெளிப்படையாகவே சவிதா அம்பேத்கரை (இவர் ஒரு பிராமணப் பெண்) குற்றஞ்சாட்டி  எழுதின.
 சவிதா அம்பேத்கர்  டாக்டர் அம்பேத்கர் அவர்களுடன் சரியாக குடும்பம் நடத்தவில்லை.அம்பேத்கருக்கு அவர் தலைவலியாகவே இருந்து வந்தார் எனக் குறிப்பிட்டன.
        பிளிட்ஸ்”BLITZ என்ற பத்திரிகை சவிதா அம்பேத்கர் தான் டாக்டர் அம்பேத்கரின் திடீர் மரணத்திற்கு காரணம் என நேரடியாகவே குற்றஞ்சாட்டி எழுதியது.
பிளிட்ஸ் பத்திரிகையில் இடம்பெற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சவிதா அம்பேத்கர் பதில் அறிக்கைகள் பேட்டிகள் என பத்திரிக்கைகளுக்கு  அளிக்கவில்லை.
பிளிட்ஸ் பத்திரிகை ஒரு படி மேலே போய் சவிதா அம்பேத்கரை வம்பிற்கிழுத்து.நாங்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உங்களிடம் பதிலோ-விளக்கமோ இருந்தால் தாருங்கள் நாங்கள் வெளியிட தயாராக உள்ளோம் என்றது.ஆனாலும் சவிதா அம்பேத்கர் கனைத்து கூட காட்டவில்லை. பத்திரிகைகள் கூறுவன உண்மை என்பதை போல் அமைதி காத்தார்.
மராட்டிய பத்திரிகைகளும் ஆங்கில பத்திரிகைகளும் ஒரு விண்ணப்பத்தை அரசின் முன் வைத்தன.அது அரசு அம்பேத்கர் மரணம் குறித்த ஆய்வு ஒன்றை நடத்திட வேண்டும்.அவருடைய மரணத்திற்க்கு காரணமானவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்றன அரசு அதை கண்டு கொள்ளவில்லை.
ஷோகன் லால் சாஸ்திரி என்பவர் அம்பேத்கரின் நெருங்கிய நண்பர்.இவர் ஆகஸ்ட் 3,1957-ல் தான் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையாக வைத்து ஒர் அறிவிப்பை செய்தார்.அதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மரணம் இயற்கையானது அல்ல கூறினார்.
அத்தோடு சவிதா அம்பேத்கர் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு பதிலாக நிரந்தர உபத்திரவங்களை செய்து கொண்டிருந்தார் என்றும் நிரூபித்தார்.இதற்கு ஒரு நாள் அம்பேத்கர் சவிதாவிடம் கூறியதை பதிவு செய்கிறார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சவிதாவிடம் கூறினார்கள் :   “ நான் அலுவலகமோ,நாடாளுமன்றமோ சென்றுவிட்டால்,நீ என்னுடைய காரில் நாள் முழுவதும் ஊர் சுற்றுகின்றாய்.பிராமண அலுவலர்களையும் அதிகாரிகளையும் சந்திக்கின்றாய். நான் திருமணத்திற்கு முன் எனக்கு தாம்பத்திய உறவில் எள்ளளவும் விருப்பமில்லை அந்த உணர்வுகள் என்னுள் மடிந்து போயின என்பதை உன்னிடம் தெளிவாக கூறவில்லையா? உனக்கு படிப்பதிலும் எழுதுவதிலும் எந்த ஆர்வமும் இல்லை.அதற்கான நேரமும் உனக்கில்லை.என்னை கவனிக்கவும் உனக்கு நேரமில்லை.நீ அனுபவிக்க வேண்டும் களித்து கிடக்க வேண்டும் என்றே விரும்புகிறாய்.நான் கடந்த ஒரு வருடமாக உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.நீ எனக்கு சேவை செய்வாய்,என்னை கவனிப்பாய் என்று கூறி அந்த ரவுடிகள் உன்னை எனக்கு திருமணம் செய்து வைத்து என்னை ஏமாற்றிவிட்டார்கள்நீ என்னிடம் என்னை கவனிப்பேன் என்றும் என்னுடைய உணவில் அதிக கவனம் செலுத்துவாய் என்றும் வாக்களிக்கவில்லையா?
பால சந்தர் லோகான்டி என்ற நாக்பூரை சார்ந்த எழுத்தாளர் தன்ன்னுடைய ஆய்வில் டாக்டர் அம்பேத்கரின் மரணம் இயல்பானதோ,இயற்கையானதோ அல்ல அது சவிதா அம்பேத்கரின் ஏற்பாடு என அடித்து கூறுகின்றார்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மரணத்திற்க்கு காரணமானவர் சவிதா அம்பேத்கர் தான் என்பதை பேசும் இரண்டு நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.அவை 1. சவிதா அம்பேத்கர்- டாக்டர் அம்பேத்கரை கொலை செய்தவர். 2. சவிதா அம்பேத்கரின் தகிடுதத்தங்கள் அம்பலம்.
இவர்களுடன் அப்போது பம்பாயிலிருந்து வந்த பத்திரிகைகளும் இன்னொரு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.
டாக்டர் அம்பேத்கரின் இரண்டாவது மனைவி சவிதா அம்பேத்கர் அவர்கள் டாக்டர் அம்பேத்கருக்கு சிறந்த மருத்துவ உதவிகள் கிடைக்காமலும்,மீறி கிடைத்த உதவிகளை தடுத்தும் வந்தார் என்றன.
இதனால் டாக்டர் அம்பேத்கர் அவ்களின் உதவியாளர்கள் மற்றும் அவருடைய தொண்டர்கள் இன்னும் அவரது நலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவரும் அனைவரும் டாக்டர் அம்பேத்கருக்கு மருத்துவம் செய்து வரும் டாக்டர் மால்வான்கர் அவர்களிடமிருந்து மருத்துவ சிகிச்சையை மாற்றிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.ஆனால் சவிதா அம்பேத்கர் வழிவிடவில்லை.பல நேரங்களில் அரசே அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சைகளை செய்திட முன்வந்தது அதையும் சவிதா அம்பேத்கர் தட்டிக்கழித்து விட்டார்.
சி.பி.கிர்மோர்டி அவர்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களே பல முறை தனக்குத் தரப்படும் மருத்துவ சிகிச்சையின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.பல நேரங்களில் டாக்டர் சவிதாவையும்,டாக்டர் மால்வான்கரையும் நேரடியாகவே கடிந்துள்ளார்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு டாக்டர் சவிதா (டாக்டர் அம்பேத்கரின் இரண்டாவது மனைவி) டாக்டர் மால்வான்கர் ஆகியோரின் உதாசீனப் போக்கை பொறுத்திட இயலாத சில புத்தக வெளியீட்டாளர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இவர்களிடமிருந்து விடுவித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்று  மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர்.அவ்வாறு செய்தவர்களில் (Free Press Journal) பிரீ பிரஸ் ஜர்னல் என்ற பழமை வாய்ந்த வெளியீட்டகத்தின் இயக்குனர்களில் ஒருவரான சிரீ நாயர் என்பவர் குறிப்பிடத்தக்கவர்.இவர் டாக்டர் அம்பேத்கரை பிப்ரவரி   ஐந்து (5.2.1954) முதல் மார்ச் மூன்று வரை (3.3.1954) தன்னுடைய விருந்தினர் மாளிகையில் வைத்து மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளார்.
1946 முதல் டாக்டர் மால்வான்கர் வழங்கிய சிகிச்சைவிட இது சிறந்ததாக இருந்தது. டாக்டர் அம்பேத்கர் சிரீ நாயரின் விருந்தினராக இருந்தபோது சிரீ சித்திரி,பி.கே.கெய்க்வார்ட் மற்றும் டி.ஜி. ஜடாங் போன்றவர்கள் டாக்டர் அம்பேத்கரை சந்தித்து பம்பாயிலுல்ல மருத்துவ குழுமத்தில் (Medical Council of Bombay) முழுமையான உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.ஆனால் டாக்டர் சவிதா அம்பேத்கர் அவர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.எந்த அளவுக்கு சவிதா அம்பேத்கர் இதில் பிடிவாதமாக இருந்தார் என்றால் இந்த கோரிக்கையை முன் வைத்தவர்கள் தேம்பி,தேம்பி அழ தொடங்கியும் ஒத்துகொள்ளவில்லை.
இவற்றிற்கெல்லாம் மேலாக அனைவரது ஐயத்தையும் அதிகப் படுத்துவது. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உடல் டெல்லியிலிருந்து பம்பாய்க்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு விமான நிலையத்தில் இருந்தபோது சில மருத்துவர்கள் டாக்டர் அம்பேத்கரின் கையிலிருந்து சிறிது இரத்தம் எடுக்க வேண்டும் என்று சொன்ன போது சவிதா அம்பேத்கர் விடாப்பிடியாக நின்று மறுத்து விட்டார்.இதில் சவிதாவின் சதி தெளிவாக அனைவருக்கும் புரிந்தது.  
         Sources : 1. Last Few Years Of Dr.Ambedkar By Nanak Chand Rattu
                       2.Dalit Voice Nov 2009 16-30
                       3.Vaikarai Velicham Dec 19-20 
                        நன்றி : MGM

1 comment:

Unknown said...

Dr Ambedkar had multi dimentional qualities and which made him a great social reformist, philosopher and legend in law affairs etc,(but i never heard about the crime(suggested) behind his death,really informative naveen soft)

Post a Comment