அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

21 November, 2010

நன்றிகள்........


சரியாக மூன்று மாதங்களை கொன்றாகி விட்டது.ஆனால் ஒரு பதிவை கூட போட வேண்டும் என்று எண்ணமே தோன்றவில்லை.வேலை ஒருபுறம் இருந்தாலும்,மனச்சோர்வும்,சோம்பலும் ஒன்று சேர கூடி கும்மி அடித்ததனால்.வலை பக்கம் வந்தாலும் படிப்பது இல்லையென்றால் படம் பார்ப்பது அரட்டை அடிப்பது இப்படியே சென்று விட்டது. மேலும் எதையாவது எழுதவேண்டும்,ஏதாவது எழுதவேண்டும் என்பதும் வன்புணர்ச்சிக்கு சமமானது என நினைப்பவன் நான்.... இனி தொடர்ந்து எழுதலாம் என்று நினைக்கிறன் பார்ப்போம் .........

நான் பதிவுகளை போட ஆரம்பிக்கும் முன்  சிலருக்கு இங்கே நன்றி கூற ஆசை படுகிறேன்.
ஏதோ வலை பக்கம் வந்தோம் மொக்கை போட்டோம் என்று இருந்த எனக்கு ஓரினசேர்க்கை,மதங்கள்,கடவுள் கொள்கைகள்,உலகில் உள்ள போராட்ட இயக்கங்கள் போன்ற பல விசயங்களை பற்றி விவாதித்து,நிறைய விசயங்களை பற்றிய தெளிவை தந்தவர் டாக்டர்.உதயா ராசேந்திரன் அவர்கள் மேலும் இவரோடு பேசவேண்டும் என்பதற்காகவே நான் நிறைய நாட்கள் காத்திருந்ததுண்டு. இவர் தமிழ் உச்சரிப்பின் ரசிகன் நான்.

                                                  Dr. Udaya Rajenthra
                        CEO & Co- founder, Creativeants Media Networks.
                                        MD, Global Tutors International
                     http://www.osco.in/speakers/udayar/
www.creativeants.com என்ற ஜெய் இணையதள வானொலியின் நிறுவனர் மற்றும் அறிவிப்பாளர் இவர் வழங்கும் நிகழ்ச்சிகளில் செந்தமிழ் அமுதம்,பேசும்நேரம் போன்றவை கலக்கலாக இருக்கும்.(ஆன்லைன் டுடோரியல்) எனப்படும்  இனையதள வகுப்பினை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு.தமிழை பாடமொழியாக எடுத்து வருகிறார், (linux os  open source interactive platforms.) லினக்ஸ் ஆபெரேடிங் சிஸ்டத்தின் தமிழ் பிளாட்பாம் அமைத்தவர்களில் ஒருவர்.
இன்னும் தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் (seminar)  சிறப்பு வகுப்புகள் எடுத்து வருபவர்.அறிவிப்பாளர்,தமிழார்வலர்,ஆசிரியர்,எழுத்தாளர் என பன்முக தன்மைகளை உடைய உங்கள் நட்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறேன்.

1 comment:

Post a Comment