இன்பமுற்றாள் என்முகம் காண்கையில் !
அவள் குருதியின் பாதியை பாலாக்கி
குளிரச் செய்தாள் என் பசியை!
ஈக்கள் எறும்புகள் என்பல
என்னிடம் அண்டாமல் எதத்னை நாள் பார்த்தாள்!
தவழச்செய்தாள் ! நடக்கச்செய்தாள் !
ஓடச்செய்தாள்! பேசச்செய்தாள் !
வீரர்களின் கதைகள் சொல்லி வீரனாக்கினாள்,
அகிம்சை வாதிகளின் கதைகள் சொல்லி
தர்மத்தை என்னுள் நிலைக்க செய்தாள் !
என் தாய் நாட்டிற்கோ நானொரு குடிமகன் என்றால்
என் தாய்க்கு நான்தான் பேரரசன் - ஆம!
அவளது கிழிந்த சேலைதான் எனது - ரத்தின கம்பளம்,
அவளது மடிச்சதையோ நான் உறங்கும் -பஞ்சு மெத்தை,
அவளது அன்பு தழுவளே எனது- பாதுகாப்பு கவசம்,
போர்கள் மட்டும் இங்கு இல்லை- காரணம்
இங்கு எதிரிகள் என்ற இலக்கு இல்லவே இல்லை!
இன்பம் துன்பம் இரண்டையும் பகிர்பவள் மனைவியென்றால்
இன்பம் எல்லாம் எனக்களித்து
துன்பம் மட்டும் தானே ஏற்பவள் அல்லவா தாய்!
இவள் இறைவனுக்கு இணையனவள்தான்,
இவள் கோவில் கட்டி கும்பிடப்பட வேண்டியவள்தான்!
இவளது சேவை கடல் போன்றது ,
இவளுக்கு எவ்வளவு சேவை-செய்தாலும்
கடுகு போன்றதே.........!
- நவீன் மென்மையானவன்
5 comments:
THAT IS SOOO BEAUTIFUL...YOUR MOM IS SO LUCKY TO HAVE A son LIKE YOU...GREAT POEM
அருமை நவீன் , மிக அருமையாக தெளிவான வரிகள் . ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை முற்றிலும் உண்மை . ஒரு தாயின் பெருமையை இவ்வளவு அழகாக உணர்த்தி உள்ளீர்கள். இது போல இன்னும் பற்பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள் !!!!!!
அன்புடன் : bernard selvaraj ( yahoo id :abccddefghijklmnopqrstuvwxyz)
Naveen superb.........
நீ நண்பன் என்று சொல்லுவதக்கு எனக்கு பெருமையாக இருக்கிறது. இது போல இன்னும் பற்பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள் !!!!!!
romba nalla irukku naveen
Post a Comment