இந்த தளம் என் வாழ்வின் நான் சந்தித்த நபர்களையும்,என் சந்தோஷ நிமிடங்களையும்,சில துரோகங்களின் கோரமுகத்தையும்,நான் ரசித்த சினிமாக்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் இடமாக இருக்கும்....எல்லாமும் பேசுவேன் எல்லாவற்றையும் பேசுவேன்...
19 December, 2010
::::::::::காக்டெயில்::::::::::
நான் பாவம் இல்லையா? கேப்டன்
நல்லா தான் தூங்கிகிட்டு இருந்தேன், என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியாது காலையில் நண்பர்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். அம்மா காப்பாத்துங்க... காப்பாத்துங்கன்னு நான் கத்தினேன் என்று. இருந்தாலும் உங்கள நம்பி படம் பார்க்க வந்த என்ன நீங்க இப்புடி பண்ணி இருக்க கூடாது கேப்டன் விருதகிரி படம் பார்க்க போய் தான் இப்படி ஆச்சுன்னு எப்புடி சொல்லுவேன்.
உங்க படத்துலேயே என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது படத்தின் ஆரம்பத்திலேயே நீங்கள் ஸ்காட்லாந்து போலீஸ் துறைக்கே பாடம் எடுப்பதுதான். அப்போது உறைந்து போய் உங்களை பார்த்து உங்கள் சாகசங்களில் சொக்கி உட்கார்ந்தவன் உட்கார்ந்தவந்தான்.. மயக்கத்தில் அப்படியே தூங்கி இருக்கிறேன் தூக்கத்தில் பயந்து அலறி இருக்கிறேன். என்ன இருந்தாலும் இந்தியாவில் உள்ள எல்லா தீவிரவாதிகளையும் பிடித்துவிட்டேன் இனிமேல் வெளிநாடு தான் என்று நீங்கள் தொடையை தட்டி புயலாய் புறப்பட்ட மன வலிமையை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை கேப்டன்.
குறிப்பு : கிறுக்கன் இன்று கத்தாரில் இருக்கும் மாந்திரீகர் இடம் அழைத்து செல்லப்பட்டு மந்தரித்து விடப்பட்டார் விருதகிரி படம் ஏற்படுத்திய பாதிப்பு குறைய மூன்று நாட்கள் ஆகும் என மதிரவாதி சொல்லி இருக்கிறார்.
=======================================================================
நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாடோம்டியோவ்
என்னப்பா நடக்குது டமில் நாட்டுல எங்க இளைய தளபதிக்கு காவலன் படத்துக்கு தியேட்டர் தர மாட்டேன்னு சொல்லுராங்கலாமே ?
தலைவா இது நீ அரசியலுக்கு வந்துருவன்னு எல்லோரும் பொறாமைல செய்யறது. நீ இதுக்கெல்லாம் கவலைப்படாத தலைவா. இவங்க எல்லாம் வில்லு உடைஞ்சி போனதை பத்தியோ சுறா செத்துப்போனதை பத்தியோ பயப்படல தலைவா. காவலன் தூங்கிடுவானோன்னு கூட இவங்க பயப்படல. எங்க நீ தேர்தலில் 2011 நின்னு சரத்குமார் கட்சிக்கோ விஜய T. ராஜேந்தருக்கு போட்டியாகவோ வந்துடுவியோன்னு பயம்.. ஏலேய் மக்கா உங்க எல்லோருக்கும் ஒன்னு சொல்லுரோம்டி நாங்க எல்லாம் இந்த சுண்டைக்காய் மிரட்டலுக்கெல்லாம் பயப்படமாட்டோம் தலைவா நீ சோர்ந்து போகாத என்ன பத்தி நானே சொல்ல கூடாது சுறாவயும் வில்லையும் முழுசா பார்த்தவன்.தலைவா நான். ஏன் கலங்குற நீ ....ஏன்னு கேக்குறேன் நான் ஒரு ஐடியா தரேன் எப்படியும் படம் வந்தால் திருட்டு VCD போட்டுருவானுக அந்த வேலையை நாமலே செஞ்சா என்னா தலைவா? VCD குடுத்து ஒட்டு கேட்போம் என்னா சொல்லுற. நீ யோசிக்கிரன்னு தெரியுது யோசிக்க நேரம் இல்ல உன் படத்தை மதுரைகார மாமா VCD போட திட்டம் போட்டுக்கிட்டு இருக்கார் நீ முந்திகண்ண ஏதோ உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன் புரிஞ்சி நடந்துக்க.
=======================================================================
எப்பா சாமி எதிர்கால அரசியல் வாதிகளுக்கு கொஞ்சம் மிச்சம் வைங்கடா
தலை சுத்துதுடா சாமி இன்னும் ஸ்பெக்ட்ரம் விவகாரமே முடியவில்லை அதற்குள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு,நிலம்,அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ததில் மாபெரும் ஊழல் என புதுசு மாமு புதுசு என கிளம்பி இருக்கிறது இதனால் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது தி.மு.க அரசு .
கார்கில் வீரர்களுக்கான ஆதர்ஷ் குடியிருப்பு வீடுகளை தன்னுடைய குடும்பத்தினர் பெயரில் ஒதுக்கிக் கொண்டார் என்ற குற்றச்சாட்டில் சிக்கி பதவியை இழந்தார் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான். மகன்களுக்கு அரசு நிலத்தை ஒதுக்கியதாக குற்றச்சாட்டில் சிக்கி கடும் பூகம்பத்துக்குப் பின் தப்பிப் பிழைத்திருக்கிறார் பக்கத்து மாநிலமான கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
இவற்றையெல்லாம் விட தமிழகத்தில் நடந்திருப்பதாகச் சொல்லப்படும் ஊழல் அதைவிடப் பெரியது’ என்கிறார்கள் மீடியா வட்டாரத்தில் வீடு இல்லாத-வர்களுக்கு வீடு அல்லது நிலம் வழங்கும் பணியைச் செய்யும் பிரதான நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்டதுதான் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகளோ அல்லது வீட்டு மனைகளோ தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது இதன் மூலம் நன்மை அடைந்தவர்கள ஆளும் தி.மு.க அரசின் அடிவருடிகளும் அவர்களுக்கு சேனை பிடித்த அரசு அதிகாரிகளும் தான் என்பதே இப்போது தமிழகத்தின் சூடான விஷயம். நான்கு நாட்களுக்கு முன்பு ஷகீலா மாமி (ஹையோ உண்மைய சொல்லிட்டியேடா கிருக்குபயலே) நீரா ராடியா வீட்டிலும் ராசாவின் வீட்டிலும் அவரின் பந்துக்கள், கோலிகள் மற்றும் கைக்குட்டைகள் என மொத்தம் 28 இடத்தில சி.பி.ஐ ரெய்டு போய் இருகிறார்கள்.என்ன என்ன மாட்டுச்சோ.......
கீழே இருக்குற வீடியோ ஏதோ பெரிய தப்பு பன்னுனவனுக்கு குடுக்குற தண்டனை இல்லையாம் மலேசியால நம்ம ஊருல பிக் பாக்கெட் அடிக்கிறவன் பொண்ண கைய புடிச்சி இழுக்குரவனுக்கு குடுக்குற தண்டனையாம்.
நல்லவேளை நம்ம ஊருல இப்புடி எல்லாம் இல்லப்பா இருந்து இருந்தா என் மக்கா என்னால் நினைத்து பார்க்கவே முடியல.ராசா அண்ணாவாவது பரவாயில்லை ஷகிலா(நீரா) மாமி உங்க சூ..சீ சீ தப்பா நினைக்காதிங்கப்பா உங்க சூப்பர் உடம்பு என்னா ஆகி இருக்கும்னு எழுத வந்தேன் சின்ன தப்பு நடந்து போச்சு.
குறிப்பு : மனதில் தைரியம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் 18+
கேட்டதில் பிடித்தது
சென்னை தேவி தியேட்டர் கழிவறையில் நண்பன் நவீன் ச்சூ...ச்சூ... போய்க்கொண்டு இருக்கும் போது சுவரில் எழுதி இருந்த வாசகம்.
"இந்தியாவின் எதிர் காலம் இப்போது உன் கையில்"
பயமக்க என்னமா யோசிக்கிறதுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Post a Comment