அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

30 December, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

தோழா......!

புத்தாண்டு வாழ்த்துக்களை

உரித்தாக்கு முதலில் - உன்

நெஞ்சம் காணும்

கனவுகளுக்கு...!

கனவுகளை

நினைவுகளாக்கும்

செயல்களுக்கு...!

தூண்டு கோலாய்த்

துணை நிற்கும்

துணிவுக்கு...!

நடைமுறைக்கு

நிழலாய் நிற்கும்

நம்பிக்கைக்கு...!

பின்

உறுதியாய்

நின்று - நீ

உளமாற வாழ்த்துக்கூறு

உற்றாருக்கெல்லாம்...!!
                             -பூஞ்சோலை

No comments:

Post a Comment